அயலான் இயக்குநர் இயக்கத்தில் ஹீரோவான சூரி!.. பூஜையில் பங்கேற்ற சிவகார்த்திகேயன்!..

X
அயலான் இயக்குநர் இயக்கத்தில் ஹீரோவான சூரி!.. பூஜையில் பங்கேற்ற சிவகார்த்திகேயன்!..

நடிகர் சூரி ஹீரோவாக அதற்குள் 6 படங்களை முடித்து விட்டு தனது 7வது படத்தை ஆரம்பித்துள்ளார். அவர், நடிப்பில் தொடர்ந்து பல படங்களின் வெற்றிக்கு பிறகு தற்போது புதிய படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளார். அப்படத்திற்கு தற்காலிகமாக ’சூரி – 7’ எனப் பெயரிட்டு பூஜை போட்டுள்ளனர். அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.

இந்தப் பூஜை நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாராவும் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் சூரி – 7 திரைப்படத்தை அயலான் படத்தின் இயக்குநர் ஆர். ரவிக்குமார் இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ட்ராவிட், சாரா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

சிவகார்த்திகேயன் சேயோன் படத்தில் நடித்து வரும் நிலையில் சூரியின் புதிய படத்தின் பூஜையில் அவர் பங்கேற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சூரி மண்டாடி படம் மூலம் 150 கோடி வசூல் செய்த நிலையில், அயலான் இயக்குநர் சூரியை வைத்து ஹிட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.