தெலுங்கில் உருவாகியுள்ள டோன்ட் ஸ்லீப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு நடிகர் விஜய் சேதுபதி, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தற்போது வெளியிட்ட பதிவில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஷம்தத் சார், டோன்ட் ஸ்லீப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள். இந்திரா ராம் அற்புதமாகத் நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவாளரான ஷம்தத் சைனுதீன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் சில தெலுங்குப் படங்களிலும், கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்திலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
இப்படத்தில் இந்திரா ராம், ரவீந்திர விஜய், தபா ரீமா, ஆதுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி ட்ரீம் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோகுல் ஹர்ஷன் இசையமைத்துள்ளார். மேலும்,ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.







