ரணபலி திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்களின் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ரணபலி படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னைக்கு வந்த விஜய்தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் நேற்று தமிழக முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்த புகைப்படங்களைத் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்த இருவரும், விஜயுடனான சந்திப்பு மகிழ்ச்சியளித்ததாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரணபலி ஒரு வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ஆக்ஷன் திரைப்படமாகும். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.







