என்னது இளையராஜாவை கார்த்திக் சுப்புராஜ் ஏமாற்றினாரா? பிரபலம் சொன்ன தகவல்!

X
என்னது இளையராஜாவை கார்த்திக் சுப்புராஜ் ஏமாற்றினாரா? பிரபலம் சொன்ன தகவல்!

சமீபத்தில் இளையராஜாவின் இசையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படம் டோரதி. இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜாவை ஏமாற்றினாரா கார்த்திக் சுப்புராஜ் என்று பேச்சு அடிபடுகிறது. டோரதி படம் கலவையான விமர்சனங்களைக் கொண்டுள்ளது. ஒரு சிலர் இந்தப் படம் தேவையா? சமூகத்தைக் கெடுக்குதுன்னு சொன்னாங்க. இன்னொரு பக்கம் இது சமூகத்துக்குத் தேவைன்னு சொல்றாங்க.

இந்தப் படத்துல இளையராஜா ருத்ர தாண்டவம் ஆடிருக்காரு. இப்படி ஒரு காட்சி இருக்குன்னு இளையராஜாகிட்ட சொல்லிருக்க மாட்டாங்க. சொல்லிருந்தா அவர் இசை அமைச்சிருக்க மாட்டாருன்னு சொல்றாங்க. இந்தப் படத்துக்கு நிறைய புரோமோஷன் பண்ணினாங்க. கார்த்திக் சுப்புராஜ் கூட இளையராஜா எடுத்த பேட்டி முக்கியமானதா அமைந்தது. ரொம்ப ஜாலியா பேசுனாங்க. ஆழமான யதார்த்தமான உரையாடலா இருந்தது.

முத்துமணிச்சரம் பாடல் அந்த திருநங்கைகளுக்காகத் தான் இசை அமைத்தார். அந்த வரிகளை எல்லாம் கூர்ந்து கவனித்தால் அப்படித்தான் இருக்கும்னு சொல்றாங்க. இல்ல. அது அவரது மகளுக்காக இசை அமைத்ததுன்னும் சொல்றாங்க. டோரதி வரும் காட்சியையும் நினைச்சுக்கலாம். அல்லது அவரது மகளுக்காக எழுதியதுன்னு நினைச்சுக்கலாம். கவிஞர் கண்ணதாசன் பாடலும் அவரவர் கண்ணோட்டத்தில் மாறத்தான் செய்யும்.

அதனாலதான் எல்லோராலும் ரசிக்க முடிகிறது. திருக்குறளும் அப்படித்தான். 1500 படங்களுக்குத் தாண்டி இசை அமைத்துள்ளார் இளையராஜா. அதனால் இந்தப் படத்தில் அவர் ஏமாற்றப்படவில்லை. ஒரு இயக்குனர் முதலில் தயாரிப்பாளர், கதாநாயகரிடம் கதை சொல்வார். அடுத்ததாக இசை அமைப்பாளரிடம்தான் கதை சொல்வார். இளையராஜாவிடம் மொத்தப் படக்கதையையும் சொல்லி விட வேண்டும்.

எந்தெந்த இடத்தில் பாடல் வரணும்னு சொல்லி விடுவாராம். சில சமயம் கதையை மாற்றினால் நல்லாருக்கும்னு சொல்வாராம். அதையும் சிலர் அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு மாற்றுவார்களாம். படத்தை 2 முறை பார்த்தால் தான் எந்த இடத்தில் எந்த இசையை வைக்க வேண்டும் என்று தேர்வு செய்ய முடியும். பின்னணி இசையைக் கோர்ப்பதற்கும் இப்படி 2 முறைதான் படத்தைப் பார்க்க வேண்டும்.

இதை எல்லாம் தாண்டி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இளையராஜாவை ஏமாற்றி இருப்பாரா? என்றால் இல்லை என்றே சொல்லலாம். 60 ஆண்டுகள் அனுபவம் உள்ள இளையராஜாவை கார்த்திக் சுப்புராஜ் 100க்கு 100 ஏமாற்ற முடியாது என்பதுதான் உண்மை. மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.