நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகமாக, ஜெயிலர் 2 படம் யுஏ சான்றிதழுடன் 2 மணி நேரம் 45 நிமிடம் ஓடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நெல்சன் இந்தப் படத்திற்கு மிகப் பொருத்தமாக என்ன காட்சிக்குத் தேவையோ அதை எடுத்திருக்கிறார். படம் வரும் அக்டோபர் 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. வரும் 11ம் தேதி சன்டிவியில் 3 மணி நேரம் பேட்டி இடம்பெற உள்ளது. அதுல என்ன பேசப்போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது.
ரஜினி பல மேடைகளில் பேசாமல் இருப்பதற்குக் காரணம் அவர் உண்மையை சொல்லிவிடுவார். அது யாருக்காவது தாக்கத்தை உண்டு பண்ணி விடும். அதனால்தான் பல மேடைகளைத் தவிர்த்து இருக்கிறார். பாட்ஷா பட வெற்றி விழாவில் ரஜினி பேசியது பல நாள்கள் ஆர்.எம்.வீ.யை மன வருத்தத்தில் ஆழ்த்தி இருந்ததாம். அதனால்தான் ரஜினி பேச்சைத் தவிர்த்து வருகிறார். நாம எது பேசினாலும் அது அரசுக்கு எதிராக ஊடகங்களால் கட்டமைக்கப்படும் என்பதால் தான் தவிர்த்து வருகிறார் என்றே தோன்றுகிறது. விஜயின் தவெக அரசைப் பற்றி ஏதாவது பேசுவாரா? குட்டி கதை சொல்வாரா? அரசியல் பேசுவாரா? அரசியலுக்கு ஏன் வரலன்னு சொல்வாரா? என்று கேள்வி எழுகிறது. அந்தப் பேட்டி முழுமையாக வந்தபிறகு தான் தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல திரைவிமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.







