அப்போ என் அப்பா தான் வில்லன்… ஆனா இப்போ…? சிலாகித்துச் சொல்லும் கயல் ஆனந்தி!

X
அப்போ என் அப்பா தான் வில்லன்… ஆனா இப்போ…? சிலாகித்துச் சொல்லும் கயல் ஆனந்தி!

நடிகை ஆனந்தி என்றதும் நமக்கு உடனே கயல் படம் தான் நினைவுக்கு வரும். அதற்கு முன்னே பொறியாளன் படத்தின் அறிமுகமானாலும் கயல் படம் தான் நமக்கு அவரை வெளிக்காட்டியது. தமிழ்த்திரை உலகில் இப்போது வளர்ந்து வரும் ஹீரோயின்களில் இவரும் ஒருவர்.

பரியேறும் பெருமாள் படத்தில் இவர் செம மாஸாக நடித்து இருந்தார். சண்டிவீரன் படமும், விசாரணை படமும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தவை. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இவர், தன் தந்தையைப் பற்றி இப்படி சொல்கிறார். என்னன்னு பாருங்க.

2012ல் பஸ்ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். எங்க அப்பா பிடி.வாத்தியார். அதனால டிசிப்ளின் ரொம்ப முக்கியம். முதல்ல அவரை வில்லனாத்தான் பார்த்தேன். ஆனா போகப் போக அவர் செய்வது எல்லாமே நல்லதுக்குத்தான் என்று புரிந்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு 100 நாள் அங்கே என்னம்மா பண்ணுவீங்க?

பார்த்து பத்திரமா இரும்மா என்று சொன்னார்.அதுதான் அவர் என்னிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள் என்கிறார் நடிகை ஆனந்தி.
பிக்பாஸ் சீசன் 10ல் நுழைந்த இவர் குறித்து பல்வேறு விவாதங்கள் வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. விஜய் படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து முன்பு வெளிப்படையாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.