cinema news

சூரியை சும்மா நினைச்சவங்களுக்கு மண்டாடி மெகா வசூல் பாடம் புகட்டிருச்சு!..

சூரியின் மண்டாடி படத்தின் தற்போதைய வசூலை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

சூரி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள மண்டாடி திரைப்படம் தொடர்ந்து வசூலை அள்ளி குவித்து வருகிறது. மேலும், இப்படம் உலகளவில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டாடியின் வெற்றி இன்னும் பிரம்மாண்டமாகி வருகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் ரூ.100 கோடி தமிழக வசூலையும், உலகளவில் ரூ.150 கோடி வசூலையும் கடந்துள்ளது. மண்டாடி திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது என படக்குழு பதிவிட்டுள்ளது.

மண்டாடி திரைப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். சூரியுடன் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம், தமிழக கடலோர மக்களின் பாரம்பரிய படகுப் போட்டியை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் கதையாக உருவாகியுள்ளது.

விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக தனக்கென தனி இடத்தை உருவாக்கிய சூரிக்கு, மண்டாடி தற்போது சூரியின் கதாநாயகன் பயணத்தில் அதிக வசூல் செய்த படமாக அமைந்துள்ளது.