ரஜினிகாந்த் படத்தை இயக்க ரெடியா இருக்கேன்!.. ஒரே போடாக போட்ட அட்லீ!..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க ரேடியாக உள்ளதாக இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார்.

அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து வெளியான பத்தா திரைப்படம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்திய செய்தியாளர் சந்தித்த இயக்குநர் அட்லி. ரஜினிகாந்துக்காக ஏதாவது கதை வைத்திருக்கிறீர்களா எனக் கேட்கப்பட்டபோது ஆம் என பதிலளித்துள்ளார்.
மேலும், தனது படங்களுக்கிடையே அடுத்த படத்தைப் பற்றி யோசிக்கும் பழக்கம் தனக்கு இல்லை, ராஜா ராணி படம் செய்யும்போது அடுத்து தெறி படம் செய்வேன் என்று எனக்குத் தெரியாது. தெறி படத்தின்போதும் அடுத்து மெர்சல் செய்வேன் என்று நினைக்கவில்லை. அதனால் ராக்கா வெளியான பிறகு அடுத்த படத்தைப் பற்றி யோசிக்காமல், இமயமலைக்குச் செல்லும் தலைவரைப் போல நானும் இரண்டு மாதங்கள் ஓய்வெடுத்து படத்தில் செய்த தவறுகளை பற்றி யோசிப்பேன் எனப் பேசியுள்ளார்.
பின்பு, ராக்கா திரைப்படம் எப்போது வெளியாகும் என்று கேட்டதற்கு, என் தயாரிப்பாளரே என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என சிரித்துக்கொண்டே விரைவில் வெளியாகும் என அட்லீ கூறினார்.
அஜித் குமாரை வைத்தும் படம் இயக்க ரெடி என்றும், ஜேசன் சஞ்சய் நடித்தால் தனது தம்பியை வைத்து படம் பண்ண மாட்டேனா என்றும் செம ஓபனாக பதிலளித்துள்ளார். தயாரிப்பாளராக பத்தா திரைப்படம் அட்லீக்கு வெற்றியை கொடுத்துள்ளது.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களை வைத்து படங்களை இயக்கி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வரும் அட்லீ, அடுத்ததாக ரஜினிகாந்துடன் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


