நான் திமிர் பிடிச்சவன் தான்!.. கெட்டுப்போனா நல்லது தான்!.. அட்லீ அதிரடி!..
வாழ்க்கையில் ஏற்படும் சில கெட்ட அனுபவங்கள் கூட நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என பேசியுள்ளார் அட்லீ.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பத்தா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற சக்சஸ் மீட்டில் தயாரிப்பாளர் அட்லீ பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அப்போது பேசிய அவர், நான் எதைச் செய்தாலும், எப்படி பேசினாலும் சிலர் குறை சொல்றாங்க, என்னை திமிர் பிடித்தவன்னும் சொல்றாங்க, நேர்மையாக இருக்கணும் என்னைச் சுற்றி இருப்பவர்கள் நல்லா இருக்கணும்னு தான் நினைக்கிறேன், அந்த நம்பிக்கையை திமிர் என்று சொன்னால் அப்படியே இருக்கட்டும் என்றும் கூறினார்.
வாழ்க்கையில் ஏற்படும் சில கெட்ட அனுபவங்கள் கூட நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். பால் தயிராகவும், தயிர் நெய்யாகவும் மாறும்போது அதன் மதிப்பு அதிகமாவது போல பத்தா படத்தின் பயணமும் எனக்கு அப்படிப்பட்ட அனுபவமாக அமைந்ததாக பேசியுள்ளார்.
மேலும், விஜய் சேதுபதி ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் முதலில் நல்ல மனிதர் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும், கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து மருதநாயகம் படத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் கூறினார். இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் பெருமையாக வளர்வார் என நம்பிக்கை உள்ளது என்று பேசினார். மேலும், பத்தா படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்வேன் என்றும் பேசியுள்ளார் அட்லீ.




