நடிகர் சூரி நடிப்பில் வெளியான மண்டாடி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான பின்னரும் தியேட்டரில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி 30 நாட்களைக் கடந்த நிலையிலும், இப்படம் 178 திரைகளில் திரையிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படத்தில் சூரியுடன் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திர விஜய், மிதுன் ஜெய் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நடைபெறும் பாரம்பரிய படகுப் போட்டியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் தமிழகத்தில் ரூ.100 கோடி மற்றும் உலகளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்நிலையில் அக்டோபர் 8ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியான இப்படம், ஓடிடியின் ரிலீஸுக்கு பின்னரும் திரையரங்குகளில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், ரசிகர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து ஐமேக்ஸ் திரையிடலும் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் ஜெயிலர் 2 ரிலீஸ் ஆகும் வரை மண்டாடி ஐமேக்ஸ் தியேட்டரில் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது.







