பிக்பாஸ் தமிழ் சீசன் 8ன் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் பற்றி வஹிதா பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மேலும், முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக சொல்லி ஏமாற்றியதாக வஹிதா கூறி அவர் தற்கொலைக்கு முயன்ற வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை பற்றி முத்துக்குமரன் விளக்கம் கேட்டிருந்த நிலையில், வஹிதா தற்போது மூன்று வீடியோக்களை வெளியிட்டு பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மருத்துவமனையில் ஏற்பட்ட செலவுகள் குறித்து முத்துக்குமரன் தன்னிடம் கேட்டதாகவும், இருவரும் வீட்டில் பேசிவிட்டு பிரிந்ததாக அவர் கூறியதாகவும் வஹிதா கூறியுள்ளார்.
முதலில் முத்துக்குமரன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது எனக்குத் தெரியாது முதல் முறை சந்திக்கும் போதே அவர் என்னிடம் நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டார். அதன் பிறகு தொடர்ந்து சந்தித்தபோது என்னை விரும்புவதாகவும் திருமணம் செய்துகொள்வதாக கூறி முத்துகுமரன் ஏமாற்றியதாக வஹிதா பேசியுள்ளார்.
இந்நிலையில் தற்போது வஹிதா என்னை அவர் கற்பழிக்கவில்லை தவறான நம்பிக்கையும் சத்தியத்தையும் செய்துள்ளார் என பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னரான முத்துகுமரனுக்கு எதிராக பாடலாசிரியர் தாமரை, பிக் பாஸ் போட்டியாள்ர் சவுந்தர்யா உள்ளிட்ட பலர் களமிறங்கி கண்டனம் தெரிவித்துள்ளனர்.







