ஆக்‌ஷன் கிங் வீட்டில் அடுத்த விசேஷம் ரெடி!.. அர்ஜுன் 2வது மகள் திருமணம் எப்போ தெரியுமா?

X
ஆக்‌ஷன் கிங் வீட்டில் அடுத்த விசேஷம் ரெடி!.. அர்ஜுன் 2வது மகள் திருமணம் எப்போ தெரியுமா?

ப்ளாஸ்ட் படம் மூலம் கம்பேக் கொடுத்த நடிகர் அர்ஜுன் தனது இளைய மகள் அஞ்சனாவுக்கு வரும் அக்டோபர் 18ஆம் தேதி திருமணத்தை நடத்தவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் கடந்த 2024ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. உமாபதி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா, இசாய் எனும் வெளிநாட்டவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு அர்ஜுன் சம்மதம் தெரிவித்ததுடன் கடந்த ஜனவரி மாதம் இத்தாலியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதற்கிடையே வரும் அக்டோபர் 18ஆம் தேதி அவர்களுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும், இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.