நடிகர் ஜெய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்திற்கு தற்பொதைக்கு தியாகராஜா டாக்கீஸ் புரொடக்ஷன் நம்பர் ஒன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கும் இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். ஹாரர் காமெடியாக உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடர்ந்து 23 நாட்கள் நடைபெறவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தென்காசியில் நடைபெற்ற படப்பிடிப்பு தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேமராவை தொடங்கி வைத்துள்ளனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆடுகளம் தொடரில் மூலம் கவனம் பெற்ற நடிகை டெல்னா டேவிஸ் தற்போது திரைப்படங்களில் அறிமுகமாகவுள்ளார். நடிகர் ஜெய்க்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது உருவாகிவரும் இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.







