அல்ல போலேலோ பாடலுடன் தெறிக்கவிடும் ஜெயிலர் 2 ப்ரோமோ!..

X
அல்ல போலேலோ பாடலுடன் தெறிக்கவிடும் ஜெயிலர் 2 ப்ரோமோ!..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் புரமோஷனுக்காக அல்ல போலேலோ பாடலுடன் ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ஜெயிலர் படத்தின் அடுத்த பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆயூத பூஜையை முன்னிட்டு வரும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு ரஜினிகாந்தின் அதிரடி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் பாகத்தை போல ஜெயிலர் 2 படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெருமா கார்த்திருந்து பார்க்கலாம்.