நல்லா இருந்தும் படம் ஓடல… நல்லா இல்லேன்னாலும் படம் பெரிய ஹிட்..! அட இதுதான் காரணமா?

X
நல்லா இருந்தும் படம் ஓடல… நல்லா இல்லேன்னாலும் படம் பெரிய ஹிட்..! அட இதுதான் காரணமா?

சில படங்கள் ஓடவே ஓடாது. பிளாப்னு சொல்வாங்க. ஆனா அது சூப்பர்ஹிட் அடிக்கும். படம் நல்லாருக்கு. சூப்பர்னு சொல்வாங்க. ஆனா அது பிளாப் ஆகிடும். உதாரணத்துக்கு கமல் படங்களில் பலவற்றை இந்த ரகத்தில் சொல்லலாம். ஹேராம் படத்தை ஆகா, ஓஹோ என்று புகழ்ந்தனர்.

ஆனால் படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. அதே போல்தான் குணாவும். ஆனால் இரு படங்களும் இன்று வரை பேசப்படுகின்றன. அந்த வகையில் பல நடிகர்களுக்கும் உதாரணங்களைச் சொல்லலாம். இதுக்கு எல்லாம் என்னதான் காரணம்னு யோசிக்கிறீங்களா? வாங்க. இந்த பிரபலம் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

நல்ல விமர்சனங்களைப் பெறும் படங்கள் வசூல்ல தோல்வி அடைவதும், மோசமான விமர்சனங்களைப் பெறும் படங்கள் பெரிய ஹிட் ஆகுறதும் எப்படி நடக்குதுன்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

திரை விமர்சகர்களுடைய பார்வை என்பது வேறு. திரை ரசிகர்களுடைய பார்வை என்பது வேறு. திரை விமர்சகர்களைப் பொருத்தவரைக்கும் படத்தின் நேர்த்தியும், படத்தில் சொல்லப்படுகின்ற கருத்துகளும்தான் ரொம்ப முக்கியம். திரை ரசிகர்களைப் பொருத்தவரை கருத்துகளை விட பொழுது போக்கு அம்சங்களுக்குத்தான் மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள்.

ஆகவே திரை ரசிகர்களைப் பொருத்தவரைக்கும் படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து இருந்தாலே பிடிக்கும். அப்படி திரை விமர்சகர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான் இந்த வித்தியாசம் வருகிறது.