பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சன் தற்போது வெளியிட்டுள்ள புதிய பிகினி புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

பில்லா படத்தில் நயன்தாராவும் அதன் தெலுங்கு ரீமேக்கில் அனுஷ்காவும் பிகினியில் வந்த போது பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், தற்போது சர்வ சாதாரணமாக ஏகப்பட்ட பிக் பாஸ் பிரபலங்கள் முதல் சீரியல் நடிகைகள் வரை பிகினி அணிந்து புதிய பட வாய்ப்புகளை தேடி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம் ரைசா வில்சன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக கவனம் பெற்றார். பின்பு வர்மா, எஃப்.ஐ.ஆர்., பொய்க்கால் குதிரை, காபி வித் காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது நோவா திரைப்படத்திலும் ரைசா வில்சன் அக்ஷன் ஹிரோயினாக நடித்து வருகிறார்.

பிரவுன் நிற பிகினி உடையில் நீச்சல் குளத்தில் எடுத்துள்ள புகைப்படங்களை ரைசா வில்சன் பகிர்ந்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் அவரது புதிய புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் பேசுபொருளாக மாறியுள்ளன.







