சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிக்கேட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் நாள் வசூல் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். மேலும், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போதைய முன்பதிவு டிக்கெட் புக்கிங்கின் நிலவரப்படி, இந்தியாவில் மட்டும் படத்தின் முதல் நாள் முன்பதிவு வசூல் ரூ.57 கோடியைத் தாண்டியுள்ளதாகவும், வெளிநாடுகளில் ரூ.25 கோடிக்கும் அதிகமான முன்பதிவு வசூல் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, உலகளவில் முதல் நாள் வசூல் ரூ.100 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் 150 கோடி முதல் நாள் வசூல் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயிலர் 2 அதனை முந்துமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.







