நெல்சன் கலக்கிட்டாரு!.. ஜெயிலர் 2வுக்கு சூப்பர் விமர்சனம் கொடுத்த கூலி டைரக்டர்!..

X
நெல்சன் கலக்கிட்டாரு!.. ஜெயிலர் 2வுக்கு சூப்பர் விமர்சனம் கொடுத்த கூலி டைரக்டர்!..

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ், அனிருத்தின் இசைக்கு நான் ரசிகர் என்றும் இப்படத்தைத் தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுகளையும் ஜெயிலர் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

ஏற்கெனவே ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் கூட்டணியில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல ஜெயிலர் 2 படமும் ஹிட் கொடுக்கும் என விமர்சனங்கள் மூலம் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது . இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.