சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இப்படி ஸ்லோமோ வாக்கிலேயே ஸ்னைப்பர் ஷாட்கள் உதவி மற்றும் கேமியோ நடிகர்களை வைத்து ஒட்டுமொத்த ஆராவையும் ஃபார்ம் பண்ணி கல்லா கட்டலாம் என்பதை கனகச்சிதமாக புரிந்து வைத்துள்ள நெல்சன் மீண்டும் அதே வேளையை பிசிறு தட்டாமல் செய்து ஜெயிலர் 2வை சூப்பர் டூப்பர் படமாக கொடுத்துள்ளார்.
முதல் பாகத்தில் வில்லனாக வர்மன் மட்டுமே வந்த நிலையில், இந்த ஜெயிலர் 2வில் வர்மனை கொன்றது யாரு என்பதை கண்டுபிடிக்கவும் காணாமல் போன சிலைகளை மீட்கவும் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ள திலீப் கதாபாத்திரம் ஜெயிலரை தேடி அலைகிறது.
இன்னொரு பக்கம் தண்ணீர் குழாய் பிரச்னையை உருவாக்கி ஜூஸ் கடை நடத்தி லோக்கல் ரவுடியாக உள்ள நமோ நாராணனின் மூர்த்தி கதாபாத்திரத்தை வைத்து வர்மனுக்கு மேலே யாரெல்லாம் இருக்காங்க என்பதை அறிந்து தீர்த்துக் கட்ட டைகர் முத்துவேல் பாண்டியன் நடத்தும் சீக்ரெட் மிஷன் என முதல் பாதி ஜெட் வேகத்தில் செல்கிறது.
ரஜினிகாந்தை கொல்ல சுராஜ் முயற்சி செய்ய, அவரை கார்னர் பண்ணி போதி கல்பாக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.ஜே. சூர்யாவை போட்டுத் தள்ள ஜெயிலர் போடும் பிளான் வீணாக எஸ்.ஜே. சூர்யாவின் வில்லத்தனமான என்ட்ரி இடைவேளைக்குப் பிறகு வருகிறது.
முதல் பாதியில் ஜெயிலருக்கு உதவி செய்த சிவராஜ்குமாரின் மனைவியையும் மகனியும் கடத்தி ஜெயிலரை கார்னர் செய்வது மட்டுமின்றி மகனை கொன்றதே ஜெயிலர் தான் என்கிற உண்மையை ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனனிடம் போட்டுக் கொடுத்து கம்பி எண்ண செய்கிறார் எஸ்.ஜே. சூர்யா.
முதல் பாதி காமெடி கலந்து சில மாஸ் காட்சிகளுடன் அதகளம் செய்ய, இரண்டாவது பாதியில் ரஜினிகாந்தின் ஒட்டுமொத்த ஆராவை வைத்தே ஜெயிலர் 2 படத்தையும் முடித்துள்ளார் நெல்சன். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் வரும் இடைவேளை காட்சியும், ரஜினிகாந்தை காவல் நிலையத்தில் இருந்து காப்பாற்ற வரும் ஹ்ரித்திக் ரோஷனின் கேமியோவும் கொடுத்த காசுக்கு ஒர்த்தாக உள்ளது.
ஜெயிலர் படத்தில் தேவையில்லாமல் தமன்னா, சுனில் போர்ஷன் வந்ததை போல கதை திசை திரும்பாமல், அந்த காட்சியையும் சரியாக பயன்படுத்தி 2வது பாதியை ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு கொடுத்த நெல்சனுக்கு கண்டிப்பாக ரஜினி ரசிகர்கள் முத்த மழை பொழிந்து விடுவார்கள்.
வேட்டையன், கூலி படங்களில் இயக்குநர்கள் பண்ண தப்பை எல்லாம் பண்ணாமல் புத்திசாலித்தனமாக நெல்சன் ஜெயிலர் 2வை இந்த ஆண்டின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக கொடுத்துள்ளார்.
ஜெயிலர் 2 – ஜெயிச்சுட்டாரு!
ரேட்டிங் – 4.5/5.







