Actor vadivelu: மனிதர்கள் இரண்டு விதம். கஷ்டப்படும்போது தனக்கு உதவி செய்து, தன்னை தூக்கிவிட்டு, வாழ்க்கையை கொடுத்தவர்களை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்து அதற்கு நன்றியாக இருப்பது. மற்றொன்று, வளர்ந்து மேலே போன பின் தன்னை தூக்கிவிட்டவர்களையே மதிக்காமல் இருப்பது. அதோடு, அப்படி இருப்பதுதான் சரி என திமிறாக இருப்பது. நகைச்சுவை நடிகர் வடிவேலு இதில் இரண்டாவது ரகம்.

மதுரையிலிருந்து சென்னை வந்த வடிவேலுவுக்கு அடைக்கலம் கொடுத்தவர் ராஜ்கிரண். அவரின் அலுவலகத்தில் எடுபிடி வேலைகளை செய்து வந்தார் வடிவேலு. அவர் மீது இறக்கப்பட்டு அப்போது அவர் தயாரித்து நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் சில காட்சிகளில் நடிக்க வைத்தார். மேலும், ஒரு பாடல் காட்சியிலும் அவரை நடிக்க வைத்தார். அதேபோல், அடுத்து அவர் இயக்கி நடித்த அரண்மனை கிளி உள்ளிட்ட சில படங்களிலும் வடிவேலுவை நடிக்க வைத்தார்.
இதையும் படிங்க: அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கை கொடுக்கிறது இல்லப்பா!… ராதிகா பையனிடம் திமிராக பேசிய வடிவேலு!…
அதன்பின் வடிவேலுவை தூக்கிவிட்டவர் விஜயகாந்த். சின்னக்கவுண்டர் படத்தில் கவுண்டமணி எதிர்ப்பு தெரிவித்தும் வடிவேலுக்கு சின்ன வேடம் கொடுத்தார். அதோடு, அவர் நடிக்கும் படங்களில் தொடர்ந்து வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்தார். மேலும், அவருக்கு வேஷ்டி, சட்டைகளையும் வாங்கி கொடுத்தார்.

ஆனால், இதே வடிவேலு விஜயகாந்தை பின்னால் எப்படியெல்லாம் பேசினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோல், ராஜ்கிரண் கஷ்டப்பட்டபோதும் வடிவேலு அவருக்கு உதவில்லை. ஒருமுறை ஓரிரு லட்சங்களை அவருக்கு கொடுத்துவிட்டு அதை எல்லோரிடம் சொல்லிக்காட்டி தம்மட்டம் அடித்தார். இதற்காக விஜயகாந்திடம் அறையும் வாங்கினார் வடிவேலு.
இதையும் படிங்க: கேப்டன் நடிக்க வேண்டிய படம்! வடிவேலுவால் எல்லாம் போச்சு – பலமான கூட்டணியா இருந்திருக்கே
சமீபத்தில் கலைஞர் 100 விழாவில் காரை பார்க் செய்த பின் பேட்டரி காருக்காக காத்திருந்தார் வடிவேலு. அந்த வண்டியில் ராஜ்கிரணும் வருவார் என அவர் எதிர்பார்க்கவில்லை. வண்டி கொஞ்ச தூரம்போனதும் நிறுத்த சொல்லிவிட்டு கீழே இறங்கிய வடிவேலு ராஜ்கிரணை ஏறிட்டும் பார்க்கவில்லை. அதன் அந்தபக்கம் வந்த வேறொரு பேட்டரி காரில் டிரைவருக்கு அருகே அமர்ந்து விழா மேடைக்கு சென்றார்.
இதுதான் வடிவேலுவின் சுபாவமாக இருக்கிறது. விஜயகாந்திடமாவது அவருக்கு கோபம் இருக்கலாம். ஆனால், ராஜ்கிரண் மிகவும் மென்மையானவர். வளர்ந்து பெரிய நடிகராகிவிட்டோம். இனிமேல் யாரையும் மதிக்க தேவையில்லை என்கிற வடிவேலுவின் அந்த குணம்தான் அவரை பலரையும் விமர்சிக்க வைத்திருக்கிறது.
இதையும் படிங்க: வடிவேலு வீட்டு பக்கம் போனால் போலீஸ் கிட்ட போவேன்… கடும் கோபம் காட்டிய விஜயகாந்த்!..
