அடேய் எனக்கு படம்தான்டா முக்கியம்!..கோட் படத்தால் தன்னுடைய ஆசையை துறந்த வெங்கட் பிரபு!…

Published on: January 10, 2024
venkat
---Advertisement---

Venkat Prabhu: தமிழ் சினிமாவில் தற்போதைய சென்ஷேசன் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. விஜயை வைத்து அவர் இயக்கி வருவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் திரைப்படத்தால் தான் இந்த பெருமை. அதிலும் விஜயின் வழக்கமான பாணி கதையில்லை என்பதும் ஆச்சரிய தகவல்.

இந்த படத்தின் அறிவிப்பு தொடங்கியதில் இருந்து வெங்கட் பிரபு செம குஷியாகி விட்டார். தொடர்ச்சியாக அப்டேட்களை குவித்தார். ஒரு கட்டத்தில் விஜயின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தன்னுடைய வாயை அடக்கி கொண்டார். கல்பாத்தி எஸ்.அகோரம் சார்ப்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இதையும் படிங்க… ஆசையாய் கமலை இயக்க போன ஹெச்.வினோத்!… இதெல்லாம் கதையா? கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?

படத்தினை ஜூன்13 தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்து இருக்கிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க கதை மட்டுமல்லாமல் இன்னும் நிறைய காரணங்களும் இருக்கிறது. பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா போன்ற பல முன்னணி நடிகர்கள். மைக் மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட வில்லன்கள்.

மேலும் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் உருவாக இருக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் கதை என்பதால் வேறு கோட் படத்துக்காக ரசிகர்கள் இப்போதே காத்து இருக்கின்றனர். ஆனால் இந்த படத்தினை வெங்கட் பிரபு சீக்கிரம் முடித்துவிடவும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறாராம். அதுக்கு அவரிடம் ஒரு செம காரணமும் இருக்கிறது.

இதையும் படிங்க… பாலசந்தரைக் கண்ணீர் விட்டு அழ வைத்த கண்ணதாசன்… எல்லாத்துக்கும் அந்தப் பாடல் தான் காரணம்.!

பொதுவாக வெங்கட் பிரபு ஒரு பார்ட்டி விரும்பி. தினமும் தன்னுடைய நாளை கொண்டாடியே முடிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர். ஆனால் அவருக்கு கோட் படம் தொடங்கியதில் இருந்து அந்த பழக்கத்தை தொடவே கூடாது என்ற முடிவில் இருக்கிறாராம். இதனால் தினம் பார்ட்டியில் இருந்தவர் மாதம் இல்ல எப்போவோ என்ற நிலைக்கு போய்விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், விஜயும் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதால் தன்னுடைய இயக்குனர் கட்டுப்பாடாக இருப்பதை விரும்புவதால் அவருக்காகவும் வெங்கட் பிரபு இதை ஃபாலோ செய்கிறாராம். சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டியில் மட்டுமே வெங்கட் பிரபு கலந்து கொண்டார் என பிரபல திரைவிமர்சகர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.