Connect with us

Bigg Boss

நெருங்கும் பிக்பாஸ் பைனல்ஸ்!.. வின்னர் தேர்வில் நடக்கப்போகும் சூழ்ச்சி!… எல்லாம் போச்சா!

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் சீசன் 7 பைனல் இன்னும் இரண்டு நாளில் நடக்க இருக்கும் நிலையில் வின்னர் தேர்வில் குழப்பமே இன்னும் நீடித்து வருகிறது. பழைய சீசன்களில் இவர் தான் வின்னர். ரன்னர் யாராக இருக்கும் எனவே ரசிகர்கள் யோசித்து வருவார்கள். ஆனால் இந்த முறை அதில் கூட நிலையான முடிவு இன்னும் எட்டப்படவே இல்லை.

பிக்பாஸ் தமிழ் 7 தொடங்கியதில் இருந்த பரபரப்பு ஆரம்ப நாளில் இருந்து குறைந்து கொண்டே வந்தது. இதற்கு காரணம் பரபரப்பாக எதுவுமே இல்லாமல் வாயால் கண்டெண்ட் கொடுங்கள் என்ற கிரியேட்டிவ் டீமின் மோசமான அணுகுமுறை தான். இருந்து நிகழ்ச்சியை போட்டியாளர்கள் முடிந்த வரை கையில் வைத்து இருந்தனர்.

இதையும் படிங்க: பெரிய பில்டப்பு கொடுத்து புஸ்ஸுனு போன கதையால இருக்கு! ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த சிறகடிக்க ஆசை!…

பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்துமே நிகழ்ச்சி மேலும் ஆட்டம் கண்டது. முதல்முறையாக ஐஸ்வர்யா தத்தாவுக்கு பிறகு அதிகம் மாயாவும், பூர்ணிமாவும் விமர்சிக்கப்பட்டனர். இருந்தும் ஐஸ்வர்யா நிறைய டாஸ்க் விளையாடினார். கடைசியில் வின்னர் பரிசில் இருந்து பணப்பெட்டி தொகை கழிக்கப்படும் என்றதும் அதை எடுக்க மாட்டேன் என்றார்.

இதை போன்ற குணத்தால் அவருக்கு நல்ல பெயரும் இருந்தது. ஆனால் பூர்ணிமா மற்றும் மாயாவுக்கும், அவருடன் இருந்த போட்டியாளர்கள் பைனல் நெருங்கும் வேலையில் கூட விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். புல்லி கேங் தொல்லை தாங்கலை என்பதே ரசிகர்களின் கடுப்பாக இருக்கிறது. வைல்ட் கார்டாக 35 நாட்களை கடந்து உள்ளே வந்தவர் அர்ச்சனா.

இதையும் படிங்க: பிரச்னைக்கு உங்களுக்கு மட்டும் பஞ்சமே இருக்காது போல!… இதுல கோபி வேற காமெடி பண்ணுறாரே!

இதனால் வின்னர் அறிவிப்பில் மாற்றம் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் சிலர். மேலும், அர்ச்சனாவை வின்னராக அறிவித்தால் இரண்டாம் இடத்தில் விஷ்ணு மற்றும் மணி தான் மாற்றி மாற்றி இருக்கின்றனர். கடைசியில் அந்த இடத்தினை மாயாவுக்கு கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது என இப்போதே ஆதங்க குரலையும் பார்க்க முடிகிறது. என்னமோ இந்த சீசனை சீக்கிரம் முடிச்சி விடுங்க பாஸ் என்பதே பலரின் ஒருமித்த கருத்து என்பதும் உண்மை.

Continue Reading

More in Bigg Boss

To Top