இந்த கணக்கு குறைஞ்சிடும்!… அதனால் தான் விஜயுடன் நடிக்கவில்லை!… அஜித்தே சொன்ன உண்மை!..

Published on: January 11, 2024
---Advertisement---

Ajith vs Vijay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும். கேட்கவே ஆசையா இருக்குல. ஆனால் இது நடக்காததுக்கு பின்னாடி உள்ள ஒரு காரணத்தினை அஜித்தே சொல்லி இருக்கிறார். அதுகுறித்த ஆச்சரிய தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ராஜாவின் பார்வையிலே படத்தின் முதன்முறையாக அஜித் மற்றும் விஜய் இணைந்து நடித்தனர். அது இருவருக்குமே ஆரம்ப காலம் என்பதால் படமும் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து இருவருக்குமே வாய்ப்புகள் வந்தது. நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித் தான் கமிட்டாகி இருந்தார்.

இதையும் படிங்க: பிரச்னைக்கு உங்களுக்கு மட்டும் பஞ்சமே இருக்காது போல!… இதுல கோபி வேற காமெடி பண்ணுறாரே!

பின்னர் தன் கதாபாத்திரத்தின் மீது சரியாக முக்கியத்துவம் இல்லை. சம்பளம் கோளாறு என பல பிரச்னைகளால் அவர் விலகியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதன் பின்னர் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் கூட இன்னைய வரை உருவாகவே இல்லை. அவர்களும் வளர்ந்து இன்று கோலிவுட்டின் இரண்டு தூணாகி விட்டனர்.

மற்ற தலைமுறை முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பது கோலிவுட்டிலே நடந்து இருக்கிறது. ஆனால் அஜித் மற்றும் விஜயை ஒரு படத்தில் ஒன்றாக நடிக்க வைப்பது இதுவரை குதிரை கொம்பாகவே இருக்கிறது. பல இயக்குனர்கள் அதற்கு டிரை செய்தாலும் அஜித் அதற்கு மறுப்பு தெரிவித்து விடுகிறாராம்.

இதையும் படிங்க: நெருங்கும் பிக்பாஸ் பைனல்ஸ்!.. வின்னர் தேர்வில் நடக்கப்போகும் சூழ்ச்சி!… எல்லாம் போச்சா!

நானும் விஜயும் சேர்ந்து நடிக்காததுக்கு காரணமே வேறு. என் படம் உருவாகும் போது அதில் ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள். அதுப்போல விஜய் படத்திலும் ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள். நாங்கள் இருவரும் ஒன்றாக நடித்தால் அதன் கணக்கு குறைந்து விடும் என்பதால் தான் நடிக்கவில்லை என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.