Connect with us
ayalan

Cinema News

தரமான VFX.. கண்டிப்பா இது அயலான் பொங்கல்தான்!.. டிவிட்டர் விமர்சனம்…

Ayalaan review: தமிழ் சினிமாவில் சயின்ஸ் பிக்சன் கதைககளை கொண்ட திரைப்படங்கள் மிகவும் குறைவு. மிகவும் அரிதாகவே அப்படி படங்கள் வருகிறது. அப்படி 8 வருடங்களுக்கு முன்பு ரவிக்குமார் எனும் ஒரு இளம் இயக்குனர் இயக்கத்தில் வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.

ayalan

அந்த படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் ரவிக்குமாரை அழைத்து பாராட்டி ‘நாம் இணைந்து ஒரு படம் செய்வோம்’ என சொன்னார். அப்படி உருவான சயின்ஸ் பிக்சன் கதைதான் அயலான். 4 வருடங்களுக்கு மேல் இப்படத்தை எடுத்தார்கள். அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் மட்டுமே.

இதையும் படிங்க: இந்த 6 பொண்ணுங்கள நம்பி ஏமாந்துட்டேன்! பிரதீப் ஆண்டனி விஷயத்தில் உண்மையை உடைத்த பிரபலம்

ஆனால், அயலான் படத்தின் டீசர், டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில்தான் பொங்கல் விருந்தாக இப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. பல இடங்களிலும் காலை 9 மணிக்கு இப்படம் வெளியானது. இந்நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படம் நன்றாக இருப்பதாக டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

twitt

குறிப்பாக இப்படத்தின் VFX காட்சிகளை இயக்குனர் ரவிக்குமார் சிறப்பாக கையாண்டிருப்பதாக பலரும் வருகின்றனர். இது கண்டிப்பா அயலான் பொங்கல்தான். காமெடி, சண்டை காட்சிகள், பாடல்கள், செண்டிமெண்ட், பின்னணி இசை என எல்லாமே நன்றாக இருக்கிறது என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தங்கலானா முக்கியம்!.. தங்கம் எப்படி ஏறி இறங்கி வொர்க்கவுட் பண்றாங்கன்னு பாருங்கடா!..

தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததிலேயே சிறந்த VFX காட்சிகள் கொண்ட படமாக அயலான் இருக்கிறது. பெரிய பெரிய இயக்குனர்களே VFX காட்சிகளில் சொதப்பியுள்ளனர். ஆனால், ரவிக்குமார் அதை சிறப்பாக செய்திருக்கிறார் என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

twitt

இப்படியாக அயலான் படத்திற்கு பாசிடிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. விண்வெளியிலிருந்து பூமிக்கு வரும் ஏலியன் பற்றிய கதை என்பதால் இப்படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top