மூன்று முறை கருகலைப்பு! ஸ்ரீவித்யாவின் திருமணக் கொடுமைகளை புட்டு புட்டு வைத்த அண்ணி

Published on: January 12, 2024
sri
---Advertisement---

Actor Srividya: தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோயினாக குணச்சித்திர நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ஸ்ரீவித்யா. ஹீரோயினாக நடித்ததை விட குணச்சித்திர நடிகையாகத்தான் மக்கள்  முன் அதிகளவு பிரபலமானார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்தில் டாப்  நடிகையாக இருந்துவந்தார் ஸ்ரீவித்யா.

கேரளாவில் ஒரு வருடத்திற்கு 14 படங்கள் வீதம் மிகவும் பிஸியான நடிகையாகவே வலம் வந்தார் ஸ்ரீவித்யா. ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் தான் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது. அவருக்கு ஒரே ஒரு அண்ணன். அவரது அம்மா ஒரு பாடகி. அவரது அண்ணன் திருமணத்திற்கு முன்பே ஸ்ரீவித்யா, ஜார்ஜ் என்ற மலையாள ப்ரோடியூசரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: ராதிகாவிடம் சிக்கினாரா கோபி? தொடரும் செழியன், எழில் பிரச்னை!… என்னங்க நடக்குது இங்க?

அதற்காக மதமும் மாறியிருக்கிறார். ஆனால் இந்த திருமணத்தில் ஸ்ரீவித்யாவின் குடும்பத்திற்கு விருப்பமே இல்லையாம். கல்யாண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாகவே தொடங்க போகப்போகத்தான் ஜார்ஜின் சுயரூபம் வெளியே தெரியவந்ததாம். அவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்யப் போவதாகவும் ஸ்ரீவித்யா கேள்விப்பட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் மூன்று முறை ஸ்ரீவித்யா கருப்பம் ஆகியிருக்கிறார். ஆனால் குழந்தை பெற்றுக் கொண்டால் நடிக்க முடியாது என்பதால் அவரது கணவர் ஜார்ஜ் தூண்டுதலின் பேரிலேயே அதை கலைத்திருக்கிறார். ஆகவே ஸ்ரீவித்யாவை ஒரு பணம் தரும் மெசினாகவே பார்த்திருக்கிறார் ஜார்ஜ். ஒரு சமயம் ஸ்ரீவித்யாவின் ஹேர் டிரெஸ்ஸர் வந்து ஸ்ரீவித்யாவின் அண்ணியிடம் ‘என்னம்மா அந்த பொண்ண அப்படி விட்டுட்டீங்க? கை நிறைய தூக்கு மாத்திரைகளை வைத்துக் கொண்டு சாகப் போறேன் என சொல்லிக் கொண்டே இருக்கிறது’ என சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: தரமான VFX.. கண்டிப்பா இது அயலான் பொங்கல்தான்!.. டிவிட்டர் விமர்சனம்…

உடனே அவரது அம்மா வேகமாக  ஸ்ரீவித்யாவின் வீட்டிற்கு சென்று அவரை போய் பார்த்திருக்கிறார். அவர்கள் இருவரையும் உள்ளேயே வைத்து ஜார்ஜ் வெளியே பூட்டி விட்டு சென்று விட்டாராம். அருகில் இருந்த உதவியாளரை வைத்துதான் அவர்கள் இருவரும் வெளியே தப்பி ஓடி வந்திருக்கிறார்கள். சிரியன் கிறிஸ்டியனாக ஸ்ரீவித்யா மதம் மாறியதால் அந்த நேரத்தில் விவாகரத்து பெற முடியாதாம். அதனாலேயே 10 வருடங்கள் வேறொரு திருமணமும் செய்யாமல் போராடியிருக்கிறார் ஸ்ரீவித்யா. இதை அவரது அண்ணன் மனைவி விஜி என்பவர் ஒரு பேட்டியில் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.