latest news
அரைச்ச மாவை அரைச்சாலும்!.. அதுக்கும் வேணும் தனித்திறமை!.. சிவகார்த்திகேயனின் அயலான் விமர்சனம் இதோ!
இந்த பொங்கலுக்கு கேப்டன் மில்லர் படம் பார்க்க வந்த ரசிகர்களையே ஈவு இரக்கமின்றி சுட்டுத் தள்ளி விட்ட நிலையில், சிவகார்த்திகேயனின் ஏலியன் படமான அயலான் கொஞ்சம் காமெடி, நிறைய எண்டர்டெயின்மென்ட், கொஞ்சம் பூமி பற்று, அதே பழைய கார்ப்பரேட் வில்லன் என கலந்து கட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க வைத்து விடுகிறது.
இன்று நேற்று நாளை படத்தில் டைம் டிராவலை வைத்துக் கொண்டு அழகான காதல் கதையை உருவாக்கி இருப்பார் ரவிக்குமார். இந்த படத்தில் ஏலியனை தமிழ் சினிமாவுக்கு தரமாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: இவ்வளவு நாள் சும்மா இருந்தது இதற்குத்தானா? தினேஷ் வாழ்க்கையில் விளையாடிய ரட்சிதா
ET, Avtar, Paul என ஏகப்பட்ட ஹாலிவுட் ஏலியன் படங்கள் வந்துள்ளன. அந்த படங்களின் இன்ஸ்பிரேஷன் மற்றும் நம்ம ஊர் கார்ப்பரேட் அரசியல் கதை என மிக்ஸ் செய்து படத்தை கொடுத்திருக்கிறார். 6 ஆண்டுகால உழைப்பு என்பதால் பழைய சிவகார்த்திகேயனை பார்க்க முடிகிறது.
சிவகார்த்திகேயன், யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் மற்றும் டாட்டூ பெயர் கொண்ட ஏலியன் மற்றும் அதற்கு சித்தார்த்தின் வாய்ஸ் என குழந்தைகளுக்கு பிடிக்கும் போர்ஷன் சிறப்பாக அமைந்துள்ளது. வழக்கம் போல இந்த படத்திலும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு பெரிதாக வேலை இல்லை.
இதையும் படிங்க: அயலான் படத்தினை விஜயகாந்த் ரசிகர்கள் மிஸ் பண்ணவே கூடாதாம்!… என்ன நடந்துச்சு தெரியுமா?
வேற்று கிரகத்தில் இருந்து பூமியில் விழும் ஒரு பொருளை வைத்து எரிபொருள் எடுக்கிறேன் என பூமியையே அழிக்கப் பார்க்கும் வில்லனிடம் இருந்து இந்த பூமியை காப்பாற்ற ஏலியன் வருகிறது. சிவகார்த்திகேயன் உடன் இணைந்து கொண்டு அது வில்லனின் திட்டத்தை எப்படி முறியடித்தது என்பது தான் இந்த படத்தின் கதை.
கம்மி பட்ஜெட்டில் தரமான சிஜியை சொதப்பாமல் கொடுத்திருக்கும் குழுவுக்கு பாராட்டுக்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் போர், இரண்டாம் பாதியில் கொஞ்சம் இழுவை என இந்த அயலானும் இந்த பொங்கலுக்கு ரசிகர்களை சற்றே சோதித்தாலும் பார்க்க வைத்து விடும்.
அயலான்: ஆறுதல்!
ரேட்டிங்: 3.5/5.