பழம்பெரும் நடிகரின் குடும்ப வாரிசு! கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாடகி

Published on: January 12, 2024
ramya
---Advertisement---

Ramya NSK: பழம்பெரும் நடிகரான என்.எஸ்.கே மற்றும் டி. ஏ.மதுரம் இவர்களின் பேத்தி என அறியப்பட்டவர் ரம்யா என்.எஸ்.கே. பெரும்பாலும் தமிழிலேயே ஏராளமான படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.

இளையராஜா இசையில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ  தானே என் பொன்வசந்தம் படத்தில் சற்று முன் என்ற பாடலை பாடி மக்கள் மனதில் ஒரு ஆழமான இடத்தை பிடித்தார். அந்தப் பாடல் இளசுகளை வெகுவாக கவர்ந்தது.

இதையும் படிங்க: அந்த படத்தில் என் கேரக்டரை பார்த்து தலையில அடிச்சுக்கிட்டாரு! கணவர் குறித்து லைலா சொன்ன சீக்ரெட்

இந்த பாடலால் சிறந்த பின்னணி பெண் பாடகிக்கான ஃபிலிம் ஃபேர் விருதை தட்டி சென்றார் ரம்யா. அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை பாடியதற்காக இன்னும் ஏராளமான விருதுகளை வென்றார். அதன் பிறகு கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ramya
ramya

ஆனால் சில வாரங்கள் மட்டுமே இருந்து பின் வெளியேற்றப்பட்டார் ரம்யா. இவர் பிரபல சீரியல் நடிகர் சத்யாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் அதற்கு முன் அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்.

இதையும் படிங்க: என்னையும் குஷ்பூவையும் அப்படி பேசாதீங்க! கஸ்தூரி ராஜாவுக்கு இப்படியெல்லாம் நடந்துருக்கா?

இப்போது இவர்களுக்கு ஒரு அழகான குழந்தையும் இருக்கிறது .சீரியல் நடிகர் சத்யா விஜய் டிவியில் பல சீரியல்களில் லீடு ரோலில் நடித்தார். ஆனால் சிறிது நாள்களாகவே தொலைக்காட்சி பக்கமே அவரை காணமுடியவில்லை. ஆனால் தீவிர உடற்பயிற்சி செய்து அது சம்பந்தமான வீடியோவை அவ்வப்போது இணையதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சத்யாவும் ரம்யாவும் நெருக்கமாக உதட்டோடு உதடு  முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை அவர்களது இணையதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: உங்கள விட சிறப்பா நான் பாட போறதில்ல.. பாட மறுத்த யேசுதாஸ்!.. மனதை உருக்கும் அந்த பாட்டா?!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.