Connect with us
mahindran

Cinema News

ரஜினி சொல்லியும் கேட்கல!.. மொத்த சீனையும் மாத்திய மகேந்திரன்!.. ஜானி படத்தில் நடந்த சம்பவம்.!..

Director mahindran: தமிழ் சினிமாவில் குறைவான படங்களை இயக்கியிருந்தாலும் உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் மகேந்திரன். தமிழ் சினிமாவின் வழக்கமான மசாலா, செண்டிமெண்ட் பாணியை வெறுத்தவர் இவர்.

துவக்கத்தில் சினிமாவுக்கு கதை, வசனம் மட்டும் எழுதி வந்தார். அதன்பின் திரைப்படங்களை இயக்கினார். சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் உதிரி பூக்கள் மற்றும் ரஜினி நடித்த ஜானி, முள்ளும் மலரும் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் சிறந்த படங்களின் வரிசையில் எப்போதும் இருக்கிறது.

இதையும் படிங்க: என்னையும் குஷ்பூவையும் அப்படி பேசாதீங்க! கஸ்தூரி ராஜாவுக்கு இப்படியெல்லாம் நடந்துருக்கா?

ரஜினி எப்படிப்பட்ட நடிகர் என்பதை காட்டிய இயக்குனர்களில் மகேந்திரன் முக்கியமானவர். எனவே, ரஜினிக்கும் மகேந்திரனை மிகவும் பிடிக்கும். தனக்கு பிடித்த இயக்குனர் மகேந்திரன் என பாலச்சந்தரிடமே சொன்னவர்தான் ரஜினி. முள்ளும் மலரும் படத்தில் ரஜினியின் நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

mahindran

அதேபோல், ஜானியிலும் ரஜினியை வித்தியாசமாக நடிக்க வைத்திருப்பார் மகேந்திரன். ஜானி படத்தை எடுத்தபோது பல சிக்கல்களை மகேந்திரன் சந்தித்திருக்கிறார். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் பாடகியாக இருக்கும் ஸ்ரீதேவி மழையில் ஒரு பாடலை பாடுவார். ‘அப்போது கையில் குடை வைத்துக்கொண்டு அந்த பாடலை ரசிப்பது போல நூறு பேராவது வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்’ என தயாரிப்பாளரிடம் மகேந்திரன் கேட்டிருந்தார்.

இதையும் படிங்க: உங்கள விட சிறப்பா நான் பாட போறதில்ல.. பாட மறுத்த யேசுதாஸ்!.. மனதை உருக்கும் அந்த பாட்டா?!..

ஆனால், படப்பிடிப்பன்று யாருமே இல்லை. அதிர்ச்சியடைந்த மகேந்திரன் தயாரிப்பாளரிடம் சென்று ‘ஒருவர் கூட இல்லையே என்னாச்சி? எனக்கேட்க, ‘ஆள் யாரும் கிடைக்கவில்லை’ என கூலாக பதில் சொன்னார் தயாரிப்பாளர். ரஜினி, ஸ்ரீதேவி கால்ஷீட் இன்னைக்கு ஒருநாள் மட்டும்தான் இருக்கிறது. படத்தை எடுத்து முடித்துவிடுங்கள்’ என சொல்ல அப்செட் ஆனார் மகேந்திரன்.

mahindran

அருகிலிருந்த ரஜினி தயாரிப்பாளிடம் ‘மகேந்திரனுக்காக இன்னும்10 நாட்கள் கூட நான் நடிப்பேன். நாளை நீங்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள். படப்பிடிப்பை வைத்துக்கொள்வோம்’ என சொல்ல தயாரிப்பாளர் வேறு காரணத்தை சொன்னார். தயாரிப்பாளர் என்ன நினைக்கிறார் என்பது ரஜினிக்கும், மகேந்திரனுக்கும் புரிந்துபோனது.

‘ஒருத்தர் கூட வேண்டாம். கிளைமேக்சை வேற மாதிரி எடுக்கிறேன்’ என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்ற மகேந்திரன் மழையால் மக்கள் எல்லாம் போய்விட்டனர். ஆனாலும், ஸ்ரீதேவி தனது காதலனுக்காக அந்த பாடலை பாடுவது போல காட்சியை மாற்றிவிட்டார். அப்படி வெளியான அந்த ஜானி படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘பொன்னியின் செல்வன்’படத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா? தவறை சுட்டிக் காட்டிய பொன்வண்ணன்

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top