Connect with us
jo

Cinema News

எல்லா மாமியாரும் ஒன்னுதானே! ஜோதிகா மும்பை போறேனு சொன்னதும் சூர்யாவின் அம்மா ரியாக்‌ஷன்

Actress Jyothika: தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. வாலி படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் நடிக்க வந்தாலும் அவரின் முதல் திரைப்பயணம் பாலிவுட்டில்தான். தமிழில் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தார்கள்.

அந்த ஹிந்தி படத்தில் நடித்தது ஜோதிகாதான். அதுதான் அவருடைய சினிமாவின் அறிமுக படம். அதன் பிறகுதான் தமிழுக்கு வந்தார். ஆரம்பத்தில் தமிழே தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டார் ஜோதிகா. ஆனால் போகப் போக தமிழும் அத்துப்பிடியாகிவிட்டது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை கழட்டி விட்ட உதயநிதி ஸ்டாலின்!.. தனுஷ் படத்தை தூக்கி கொண்டாடிட்டாரு!..

இப்போது ஒரு பாரம்பரிய குடும்பத்தின் மருமகளாகவும் மாறியிருக்கிறார். சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சிறிது ஆண்டுகள் சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். ஆனால் இப்போது தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஜோதிகாவின் திருமணத்தில் இருந்து இப்போது அவர் மும்பையில் செட்டிலான வரை ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தன. சூர்யாவின் குடும்பத்திற்கும் ஜோதிகாவிற்கும் ஏதோ பிரச்சினை என்றெல்லாம் வதந்திகள் வந்தன. ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜோதிகாவின் ஒரு பேட்டி சமீப நாள்களாக வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: கேப்டன் மில்லரிடம் முதல் நாளில் அடிவாங்கிய அயலான்!.. பொங்கல் விடுமுறைக்குள் திருப்பிக் கொடுப்பாரா?

இந்த தீபாவளி அன்று ஜோதிகா அவருடைய அம்மா அப்பாவுடன் தீபாவளியை கொண்டாடவேண்டும் என நினைத்தாராம். அதனால் சூர்யாவின் அம்மாவிடம் அனுமதி கேட்டாராம்.  ‘திருமணம் ஆனதில் இருந்தே என் அம்மாவுடன் தீபாவளியை கொண்டாட வில்லை. அதனால் இந்த தீபாவளிக்கு நான் மும்பையிலேயே இருக்கிறேன் அம்மா’ என கூறியிருக்கிறார் ஜோதிகா.

அதற்கு சூர்யாவின் அம்மா ‘எல்லாரும் போயிட்டீங்கனா நாங்க மட்டும் தனியா என்ன பண்றது?’ என கேட்டாராம். அதற்கேற்றாற்போல ஜோதிகா அம்மா வீட்டிலும் ஏதோ ப்ளான் பண்ண அவர்கள் எங்கேயோ வெளியே போய்விட்டார்களாம். வேறு வழியில்லாமல் இந்த தீபாவளிக்கு சூர்யாவின் வீட்டிற்குத்தான் வந்தாராம் ஜோதிகா. இதை ஜோதிகாவே ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டிய தனுஷ்!.. கேப்டன் மில்லர் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?..

google news
Continue Reading

More in Cinema News

To Top