---Advertisement---

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

Published on: April 1, 2026
bharathi raja
---Advertisement---

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி கவனிக்கத்தக்க இயக்குனராக மாறினார். இவர் இயக்கத்தில் வெளியான கடலோரக் கவிதைகள், முதல் மரியாதை, புதுமைப் பெண், வேதம் புதிது உள்ளிட்ட பல படங்கள் தமிழ சினிமாவில் முக்கிய படங்களாக அமைந்தது.

பல புதிய நடிகர் மற்றும் நடிகைகளை தனது திரைப்படங்களில் அறிமுகம் செய்தார். மேலும் தனது திரைப்படங்களில் புரட்சிகரமான வசனங்களையும், காட்சிகளையும் வைத்தார் பாரதிராஜா. அவரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பல நடிகர்களும், நடிகைகளும் ஆசைப்பட்டார்கள்.. வயதான பின் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார் பாரதிராஜா.

கடந்த சில வருடங்களாகவே பாரதிராஜா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். ஏற்கனவே தனது மகன் மனோஜ் இறந்து போனதால் மனரீதியாக உடைந்து போன பாரதிராஜா தற்போது முதுமை மற்றும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை ஒருவர் பகிர்ந்து ‘பாரதிராஜாவை இப்படி பார்ப்பதற்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.. அவர் விரைவில் பூரண நலம் பெற்று திரும்ப வேண்டும்’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.