Connect with us

Bigg Boss

ஆளவிடுங்கடா சாமி!.. நான் பிக் பாஸ் பார்க்குறதே இல்லை!.. தெறித்து ஓடிய எக்ஸ் பிக் பாஸ் போட்டியாளர்!..

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 3வது ரன்னர் அப்பாக கடைசி வரை அந்த சீசனில் விளையாடிய நடிகை ஜனனி நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த இடத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவரிடம் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் கேள்விகளை எழுப்பப்பட்ட நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியே பார்ப்பது இல்லை என அதிரடியாக கூறியுள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநராக ஒரு சீனில் வந்து சென்றிருப்பார் ஜனனி. அதன் பின்னர், பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஜனனிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதையும் படிங்க: ஓ நோ!.. சட்டை பட்டனை கழட்டி ஒல்லி பெல்லியை காட்டிய நாகினி நடிகை!.. ஓவர் ஜூம் பண்ணும் ஃபேன்ஸ்!..

தெகிடி, அதே கண்கள், பலூன், முப்பரிமாணம், தர்ம பிரபு, வேழம், பஹீரா உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் ஜனனி.

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய கேள்விக்கு அந்த ஷோவில் இருந்து வெளியே வந்ததும் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதே கிடையாது என்றும் அந்த நிகழ்ச்சியை பார்க்க புடிக்கவில்லை என்றும் பதில் அளித்துள்ளார். பிக் பாஸுக்கு பிறகு ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை என்றும் அதற்கு முன் எப்படி பட வாய்ப்புகள் கிடைத்ததோ அதே எண்ணிக்கையில் தான் இப்போதும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன என பளிச்சென்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அயலான், கேப்டன் மில்லர் லைஃப் டைம் வசூலே இவ்ளோ வராது!.. முதல் நாளிலேயே கெத்துக் காட்டிய மகேஷ் பாபு!

மேலும், டீப் ஃபேக் வீடியோக்களால் நடிகைகள் ரொம்பவே பாதிக்கப்படுகின்றனர் என்றும் அடுத்து கெளதம் கார்த்தி உடன் கிரிமினல் படத்தில் சரத்குமார் மகளாக நடித்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top