அந்த விஷயத்துல அந்த நடிகையை அடிச்சிக்கவே முடியாது!.. புகழ்ந்து தள்ளிய கண்ணதாசன்…

Published on: January 14, 2024
Kannadasan
---Advertisement---

குட்டுப்பட்டாலும் மோதிர விரலால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்வார்கள். அந்த மோதிர விரலுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல. இயக்குனர் சிகரம் பாலசந்தர் தான். அவரது பட்டறையில் இருந்து யார் வந்தாலும் அவர்கள் சிறந்த நடிகர்களாகத் தான் ஒளிவீசுவார்கள். அதே போல அந்தக் காலத்தில் கவியரசர் கண்ணதாசன் சாதாரணமாக யாரையும் புகழ்ந்து விட மாட்டார். ஆனால் ஒரு நடிகையை புகழ்ந்து இருக்கிறார். அவர் யாரென்று பார்க்கலாமா…

கவியரசர் கண்ணதாசன் என்றாலே காதல், சோகம், காமெடி, நம்பிக்கை, துரோகம் என எந்த சூழலுக்கும் ஏற்ப பாடல்களை எழுதுபவர் தான். அந்த நடிகை வேறு யாருமல்ல. 1957ல் வெளியான  முதலாளி என்கிற படத்தில் அறிமுகமான தேவிகா. ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டாலும் தமிழை அருமையாக உச்சரிப்பார். நடிகை கனகாவின் தாயார் தான் தேவிகா.

கண்ணதாசன் தயாரித்த ‘மங்கல மங்கை’ என்ற படத்தில் தேவிகா நடித்தாராம். அதில் ஒரு பாடலில் விரகதாபத்துடன் நடித்து இருந்தாராம் தேவிகா. அதைப் பார்த்த கண்ணதாசன் அவரைப் போல இதுவரை எவருமே நடித்ததில்லை என்று புகழ்ந்து தள்ளினாராம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மங்கல மங்கை படம் பாதியிலேயே நின்று போனது.

தயாரிப்பாளர்களுக்கு சங்கடத்தைக் கொடுக்கும் நடிகைகள் பலர் உண்டு. அதே நேரம் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த நடிகைகளும் உண்டு. அவர்களில் இரண்டாம் ரகம்தான் தேவிகா.

Actress Devika
Actress Devika

இவர் தயாரிப்பாளர்களுக்கு ஒரு நஷ்டம் என்றால் கைகொடுத்து உதவுவார். இன்றைய நடிகைகளை விட அவர் அன்றே அருமையாக நடித்தார். அவர் செய்த ஒரே தவறு. வாழ்க்கையை ஒழுங்காகத் தேர்ந்தெடுக்காதது தான். இதை மட்டும் அவர் ஒழுங்காகச் செய்திருந்தால், அவரது குணத்துக்கும், நடத்தைக்கும் எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அவருக்கு அமைந்திருக்கும்.

‘உங்க படங்களில் தேவிகாவை விட்டால் வேறு நடிகைகள் கிடைக்கவில்லையா?’ என்பார்கள். எந்தக் குடை மழை, வெயிலில் இருந்து என்னைக் காப்பாற்றுகிறதோ அதைத் தான் தேர்ந்தெடுப்பேன் என்பேன். சில நேரங்களில் நான் திட்டிவிட்டால் அழுவார். ஆனால் ஒருபோதும் என் மீது அவர் கோபம் கொண்டதே இல்லை என்றார் கண்ணதாசன்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.