
Cinema News
கொரியர் பாயாக வேலை செய்த கே.வி.மகாதேவன்!.. இசைமேதையின் ஆச்சர்யமான மறுபக்கம்…
Published on
By
KV Mahadevan: தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் கே.வி.மகாதேவன். 1942ம் வருடம் முதல் 1991 வரை பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் இவர். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு முன்னோடி இவர். இவரின் முழுப்பெயர் கிருஷ்ணகோவில் வெங்கடாச்சலம் மகாதேவன்.
நாகர்கோவிலை சேர்ந்த இவர் 50 வருடங்களாக இசையமைப்பாளராக திரையுலகில் இசையமைத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இவருக்கு மிகவும் பிடித்த இசைக்கருவி நாதஸ்வரம். நாதஸ்வரத்தை பயன்படுத்தி அவர் பல திரைப்படங்களில் மாயாஜாலங்களை நிகழ்த்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: ரெண்டு படம் நடிச்சிட்டா டைரக்டர் ஆயிடலாமா?!.. சீண்டிய நபருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பதிலடி..
சிவாஜியும், பத்மினியும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் கே.வி.மகாதேவன் அந்த நாதஸ்வரத்தை வைத்து கொடுத்த இசை இன்னும் 100 வருடங்களுக்கு பேசப்படும். குறிப்பாக மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பாடலில் அவர் நிகழ்த்திய மாயாஜாலம் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.
சிவாஜி நடித்த வசந்தமாளிகை படத்தில் மிகவும் அற்புதமான பாடல்களை அவர் கொடுத்திருந்தார். அடிமைப் பெண், குலமகள் ராதை, காஞ்சி தலைவன், அன்னை இல்லம், வேட்டைக்காரன், தொழிலாளி, நவராத்திரி, எங்க வீட்டு பெண், முகராசி, சரஸ்வதி சபதம், தனிப்பிறவி, கந்தன் கருணை, அரச கட்டளை, திருவருட்செல்வர், விவசாயி, பல்லாண்டு வாழ்க என ஏராளமான திரைப்படங்களில் மகாதேவன் இசையமைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஹிட் பட இயக்குனர்களை காக்க வைத்து காலி பண்ணும் ரஜினி, கமல்!.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!..
தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களுக்கும் கே.வி.மகாதேவன் இசையமைத்திருக்கிறார். 2001ம் வருடம் தனது 83வது வயதில் கே.வி.மகாதேவன் மரணமடைந்தார். எத்தனை வருடங்கள் ஆனாலும் கே.வி.மகாதேவனின் இசை காற்றில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.
சினிமாவுக்கு வருவதற்கு முன் கே.வி.மகாதேவன் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார். மேலும், ஒரு கடிதத்தை ஒரு இடத்தில் வாங்கி மற்றொரு இடத்தில் கொடுக்கும் கொரியர் பாய் வேலையையும் அவர் பார்த்திருக்கிறார். இதுபற்றி ஒரு பத்திரிக்கை ஒன்றில் பேசிய கே.வி.மகாதேவன் ‘திருடாமல், மற்றவர்களை ஏமாற்றாமல் எந்த வேலையையும் செய்யலாம். நான் செய்த வேலைகளை சொல்வதில் எனக்கு எந்த கூச்சமும், தயக்கமும் இல்லை’ என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அப்பாவுடனே ஐக்கியமான தனுஷ் மகன்கள்!.. அம்மா, தாத்தாவுடன் பொங்கல் கொண்டாடலயா?..
Rashmika Mandana: சிவகார்த்திகேயனின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் அல்லது அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என...
Ajith Vijay: கோலிவுட்டில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வருபவர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். சின்ன பட்ஜெட்டுகளில் சில படங்களை தயாரித்திருக்கிறார்....
Seeman: இயக்குனர் மணிவண்ணனிடம் சில படங்களில் வேலை செய்தவர் சீமான். மேலும் பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி, இனியவளே, வீரநடை ஆகிய 5...
Vijay TVK: சினிமாவில் உச்சம் தொட்டு அடுத்து அரசியலிலும் சாதிக்கவேண்டும் என்ற முனைப்போடு வந்தார் விஜய். ஆரம்பத்தில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான...
Vijay: தற்போது அரசியல் களத்தில் தவெக கட்சிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் பெரும்...