ஆபிஸ் மூடிய விஷயத்தை சொல்ல முடியாமல் திணறும் கோபி!… மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவாரோ!

Published on: January 17, 2024
---Advertisement---

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியுடன் குடித்து கொண்டு இருந்த எழில் மற்றும் செழியன் கூப்பிட்டு போய் திட்டி சாப்பிட வைக்கிறார் பாக்கியா. யாருக்கு தான் பிரச்னை இல்ல. இனி குடிக்க கூடாது என சத்தியமும் வாங்கி விடுகிறார்.

அடுத்ததாக, ஜெனியும் அவர் அப்பா ஜோசப்பும் நீதிமன்றத்துக்கு செல்ல தயாராகின்றனர். செழியன் உன்னை பத்தி நிறைய குற்றம் சொல்லுவான். அதை பத்தி நீ கவலையே படக்கூடாது என்கிறார். இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் கோர்ட் கிளம்புகின்றனர்.

இதையும் படிங்க: செம நக்கல்யா உனக்கு!.. மீண்டும் விஜய்யை வான்ட்டட்டா வம்புக்கு இழுத்த மீசை ராஜேந்திரன்!..

வீட்டில் செழியன் கோர்ட் கிளம்ப தானும் வருகிறேன் என்கிறார் கோபி. இல்லப்பா அம்மாவோட போயிட்டு வந்துடுறேன் என்பதால் கோபி அதிர்ச்சி ஆகிவிடுகிறார். ஈஸ்வரி விவகாரத்து கிடைச்சா குழந்தையாவது நமக்கு வரணும். அவர்களும் கோர்ட் கிளம்பி சென்று விடுகின்றனர்.

ரூமுக்கு வரும் கோபியிடம் அப்பவே சொன்னேன்ல. ரொம்ப எறங்கி போகாதீங்க. அவங்க எப்பையும் பாக்கியாவை தான் வேணும் சொல்லுவாங்க. நீங்க இருக்கீங்கனு சொன்னா போதும். ரொம்ப போய் நிக்க வேண்டாம் என்கிறார். இதையடுத்து கோபி சட்டையை கழட்ட என்ன ஆச்சு என்கிறார் ராதிகா.

இதையும் படிங்க: நடிகருக்கு அந்த பழக்கமே இல்லையாம்!… ஆனா படத்துக்காக என்ன செஞ்சாரு தெரியுமா?

வீட்டில் ஆபிஸ் மூடிய விஷயத்தை சொல்லவும் முடியலை. சொல்லாமல் இருக்கவும் முடியலை. வேறு வேலை தேடணும் என்கிறார். செந்தில், உனக்கு 40 வயசு ஆகிட்டுடா  இனி வேலை கிடைக்கிறது கஷ்டம் என்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.