Connect with us
sivaji ganesan

Cinema News

நானே நடிகன்… என்னிடமே நடிப்பா… சிவாஜியிடம் மாட்டி கொண்ட பத்திரிக்கையாளர்… நடிகர் திலகம்னா சும்மாவா!..

Sivaji Ganesan: தனது திறமையான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பின் பல்கலைகழகம் என்றே இவரை அழைக்கலாம். எந்த ஒரு நடிகரானலும் இவரின் நடிப்பை பின்பற்றாதவர்கள் என இருக்கவே முடியாது.

பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை சம்பாதித்து கொடுத்தது. இப்படத்தில் இவர் பேசிய வசனங்கள் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இருந்தது. பல மேடை நாடகங்களில் நடித்த அனுபவமே இப்படத்தில் இவரின் வசனங்களுக்கு வெற்றியை பெற்று தந்தன.

இதையும் வாசிங்க:ரசிகர்கள் மீது வெறுப்பை கொட்டும் அஜித்!… ஒரு காலத்தில் எப்படி இருந்தார் தெரியுமா? பிரபலம் சொல்லும் சம்பவம்!…

பின் இவர் நடித்த பாசமலர், பணம், கர்ணன் போன்ற பல திரைப்படங்கள் இவருக்கென தனி அந்தஸ்தை பெற்று தந்தன. மேலும் இவர் அரசியல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் அரசியலில் இவரால் அந்த அளவுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் இவர் நடிகர் சங்கத்தின் தலைவராக சில காலம் இருந்தார்.

அந்த சமயத்தில் இவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திய விஷயமென்றால் அது நடிகர் நடிகைகளை பற்றி கிசுகிசு எழுதுவதுதான். நடிகர் நடிகைகளை வைத்து மாதந்தோறும் கிசுகிசு வெளிவருவது வழக்கமாக இருந்தது. பல சினிமா நட்சத்திரங்களும் இது விஷயமாக சிவாஜியிடம் வந்து கோரிக்கை வைப்பது வழக்கம். அந்த நேரத்தில் எம்.பி.மணி என்பவர்தான் இது போன்ற கிசுகிசுக்களை எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் அவர் சினிமாவில் உள்ள பல நடிகர்களுக்கும் நல்ல பழக்கமானவரும் கூட.

இதையும் வாசிங்க:பைத்தியமா இந்த பையன்?!.. டி.எம்.எஸ்சை கலாய்த்த நபர்.. வரிஞ்சி கட்டிகொண்டு வந்த பி.யூ.சின்னப்பா…

அதைபோல் சிவாஜிக்கும் மிகுந்த நெருக்கமானவரும் கூட. ஒரு முறை சிவாஜி எம்.பி.மணியிடம் யார் இவ்வாறு கிசுகிசுக்களை எழுதுவது என கண்டுபிடிக்குமாறு கூறியிருந்தாராம். ஆனால் மணி தனது தொழிலுக்கு விசுவாசமாய் இருந்ததால் அவர்தான் அந்த மாதிரியான கிசுகிசுக்களை எழுதுவது என்பதை சிவாஜியிடம் இருந்து மறைத்துவிட்டாராம்.

ஆனால் ஒரு நாள் சிவாஜிக்கும் மணிக்கும் மட்டுமே தெரிந்த ஒரு விஷயம் கிசுகிசுவாக வெளிவந்துள்ளது. அப்போது சிவாஜி அதை கண்டுபிடித்துவிட்டாராம். பின்னர் மணியை அழைத்து நானே மிகப்பெரிய நடிகன்… நீ என்னிடமே இத்தனை நாட்களாய் நடித்திருக்கிறாய்… என கூறினாராம். அதற்கு மணி பதில் கூற முடியாமல் நின்றுள்ளார். ஆனால் சிவாஜியோ மணி தனக்கு நெருக்கமானவர் என்பதால் அவரை எதுவுமே சொல்லாமல் மன்னித்து விட்டுவிட்டாராம்.

இதையும் வாசிங்க:ரெண்டு படம் நடிச்சிட்டா டைரக்டர் ஆயிடலாமா?!.. சீண்டிய நபருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பதிலடி..

Continue Reading

More in Cinema News

To Top