Cinema News
மிகப்பெரிய தோல்விக்கு பின் 2023ல் கம்பேக் கொடுத்த 4 இயக்குனர்கள்!. கலங்க வைத்த ‘சித்தா’..
2023 hit movies: சினிமாவில் இயக்குனராகும் வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஒரு இயக்குனரிடம் பல வருடங்கள் போராடி உதவி இயக்குனராக சேர வேண்டும். அவரின் இயக்கத்தில் சில படங்களில் நடித்துவிட்டு ஒரு கதையை உருவாக்கி இயக்குனராக முயற்சி செய்ய வேண்டும். நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பின்னால் அலைய வேண்டும்.
தயாரிப்பாளர் கிடைத்தால் நடிகர் கிடைக்கமாட்டார். நடிகர் சம்மதம் சொன்னால் தயாரிப்பாளர் கிடைக்கமாட்டார். இது இரண்டும் அமைந்து படத்தை துவங்கினாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் படம் முடிய வேண்டும். அப்படி முடிந்தாலும் படம் சொன்ன தேதியில் வெளியாக வேண்டும். அப்படி வெளியானாலும் அந்த படம் ஒரு வெற்றிப்படமாக அமைய வேண்டும்.
இதையும் படிங்க: ஏகே63 படத்தில் அதிகரிக்கும் தெலுங்கு கூட்டம்!.. இது அந்த படம் மாதிரியே இருக்கே!… அதுச்சரி!…
அப்படி வெற்றி பெற்றால்தான் அந்த இயக்குனர் எல்லோராலும் கவனிக்கப்பட்டுவார். அவரை தேடி நடிகர்களும், தயாரிப்பாளர்களும் வருவார்கள். சில இயக்குனர்கள் ஒன்றிரண்டு வெற்றிப்படங்களை கொடுப்பார்கள். அதன்பின் தோல்வி படங்களை கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுவார்கள். அப்படி காணாமல் போன சில இயக்குனர்கள் திடீரென ஒரு வெற்றிப்படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார்கள். அப்படி சில தோல்விப்படங்களை கொடுத்த சில இயக்குனர்கள் 2023ம் வருடம் பெரிய வெற்றி மூலம் கம்பேக் கொடுத்தது பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
இதில் 4வது இடத்தில் இருப்பவர் சித்தா பட இயக்குனர் அருண்குமார். பண்ணையாரும் பத்மினியும் படம் மூலம் இயக்குனரானவர் இவர். அதன்பின் சேதுபதி, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கினார். இதில் 2019ம் வருடம் வெளிவந்த சிந்துபாத் படம் தோல்விப்படமாக அமைந்தது. 3 வருடங்கள் கழித்து சித்தா படம் மூலம் கம்பேக் கொடுத்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க: டிவியில் டி.ஆர்.பி களைகட்டும் 10 திரைப்படங்கள்.. முதலிடம் பிடித்த ஜெய்பீம்!..
3வது இடத்தில் இருப்பவர் ஆதிக் ரவிச்சந்திரன். திரிஷா இல்லனா நயன்தாரா எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இவர் அடுத்து இயக்கிய A.A.A., பகீரா படங்கள் படுதோல்வி அடைந்தது. ஆனால், மார்க் ஆண்டனி படம் மூலம் ஹிட் கொடுத்து கம்பேக் கொடுத்திருக்கிறார். இதனால், அடுத்த அஜித் படத்தையும் இயக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்திருக்கிறது.
2ம் இடத்தில் இருப்பது ஹெச்.வினோத். 2022ல் வெளியான வலிமை திரைப்படம் ட்ரோலுக்கு உள்ளானது. எதிர்பார்த்த வெற்றியையும் இப்படம் பெறவில்லை. எனவே, மீண்டும் அஜித் அவருக்கு வாய்ப்பு கொடுக்க உருவான திரைப்படம்தான் துணிவு. 2023 ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இப்போது கமல் படத்தை இயக்கும் அளவுக்கு ஹெச்.வினோத் உயர்ந்துவிட்டார். அதேபோல், பீஸ்ட் படம் மூலம் சமூகவலைத்தளங்களில் ட்ரோலை சந்தித்த நெல்சன் சொல்லி அடித்த படம்தான் ஜெயிலர். இப்போது 50 கோடி சம்பளம் கேட்கும் பெரிய இயக்குனராக நெல்சன் உயர்ந்திருக்கிறார்.
இதையும் படிங்க: ‘கோட்’ படத்தில் விஜய் ஹீரோ இல்லையா?.. சாக்லேட் பாய் இருக்கும் போது நடக்குமா?.. என்னப்பா சொல்றீங்க!..