Connect with us
vijay

Cinema News

‘கோட்’ படத்தில் விஜய் ஹீரோ இல்லையா?.. சாக்லேட் பாய் இருக்கும் போது நடக்குமா?.. என்னப்பா சொல்றீங்க!..

GOAT Movie: விஜய் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் கோட். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா போன்றோர்கள்  நடிக்கிறார்கள்.

அவர்கள் தவிர வெங்கட்பிரபுவுக்கே படைக்கப்பட்டவர்களாக விளங்கும் பிரேம்ஜி , வைபவ் போன்றோர்களும் நடிக்க இருக்கிறார்கள். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில்தான் தற்போது நடந்து வருகிறது. கோட் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் விஜய்.

இதையும் படிங்க: ஜவ்வா இழுக்கிறதுனா இதானா? எப்பங்க இந்த டைவர்ஸ் கேஸ முடிப்பீங்க!… புலம்பும் ரசிகர்கள்

இந்தப் படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் போன்ற முன்னணி கதாநாயகர்களும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் கோட் படத்தின் ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அந்தப் போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் அஜ்மல் ஆகியோர் கையில் துப்பாக்கியுடன் மிலிட்டரி உடையணிந்து போஸ் கொடுக்கும் மாதிரியான போஸில் இருந்தனர்.

அதை பார்த்த இன்னும் சிலர் விஜய்க்கு பின்னாடி பிரசாந்த் நிற்பதா? இது என்னடா சாக்லேட் பாய்க்கு வந்த சோதனை என்றெல்லாம் கமெண்டில் கூறி வந்தார்கள். இந்த நிலையில் கோட் படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிபவர் திலீப் சுப்பராயன்.

இதையும் படிங்க: எலி தானா சிக்கப்போகுது!… சொன்ன கதையை உண்மையாக்க நினைத்து சிக்க போகிறாரா ரோகினி?

அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கோட் படத்தை பற்றி சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது கோட் படத்தை பற்றி ஒன்லைனில் சொல்லுங்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த திலீப் சுப்பராயன் ‘கோட் வெங்கட் பிரபு படம். அவர்தான் ஹீரோ’ என்று பதிலளித்தார். அதாவது இந்தப் படத்தில் கண்டிப்பாக விஜயின் குறுக்கீடு இருக்காது என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறார் திலீப் சுப்பராயன். மேலும் எடுத்த வரைக்கும் படம் மிக நன்றாக வந்திருப்பதாகவும் திலீப் சுப்பராயன் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top