Connect with us
rajini

Cinema News

இது வேணாம்.. ஸ்கிரீனை கிழிச்சுடுவாங்க! தயாரிப்பாளர் பேச்சையும் மீறி ரஜினி படத்தில் இருந்த அந்த சீன்

Actor Rajinikanth: தமிழ் சினிமாவில் என்றும் இன்றும் பெரும் ஆளுமையாக இருக்கும் நடிகராக இருந்து வருபவர் நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்னக்குழந்தையும் சொல்லும் என்பதற்கேற்ப எந்த குழந்தையிடமும் போய் கேட்டால் ரஜினி என்று பளிச்சென்று சொல்லிவிடும்.

அந்தளவுக்கு ரஜினியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். அவருடைய இந்த திரை அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடம். 1975 ஆம் ஆண்டு முதன் முதலில் சினிமாவில் அடியெடுத்து வைத்த ரஜினி இன்று வரை மக்களை உற்சாகப்படுத்திக் கொண்டே வருகிறார்.

இதையும் படிங்க: 18 படங்கள் நடிச்சும் வாய்ப்பில்லாமல் தவித்த விஜயகாந்த்!.. மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய அந்த திரைப்படம்…

அதே ஸ்டைல், அதே சுறுசுறுப்பு , அதே வேகம் என பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். 73 வயது மனிதரா இவர்? என்று ஆச்சரியப்பட்டு கேட்கும் அளவுக்கு அதே உத்வேகத்துடன் ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ரஜினியின் கெரியரில் டாப் டக்கர் படமாக அமைந்த திரைப்படம் பாட்ஷா. தேவாவின் இசையில் பாட்ஷா படம் பெரும் புகழைப் பெற்றது. அந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நக்மா நடிக்க ஆனந்த்ராஜ் மற்றும் ரகுவரன் வில்லனாக நடித்திருப்பார்கள்.

இதையும் படிங்க: நாடகத்தில் சிவாஜிக்கு கிடைத்த அந்த வேடம்!. ஆனாலும் ரசித்து செய்து கைத்தட்டலை வாங்கிய நடிகர் திலகம்..

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஆர்.எம்.வீரப்பன் அந்தப் படத்தை தயாரித்திருந்தார். அந்தப் படத்தில் ரஜினியை கம்பத்தில் கட்டிவைத்து ஆனந்த்ராஜ் அடிக்கும் சீன் படமாக்கிக் கொண்டிருக்கும் போது அதை பார்த்த வீரப்பன் சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து ‘என் படத்தில் இந்த சீன்லாம் செட்டாகாது. தியேட்டருக்கு வருகிறவர்கள் ஸ்கிரீனை கிழித்து தொங்க விட்டுருவாங்க’ என்று சொல்லியிருக்கார்.

உடனே ரஜினி வந்து வீரப்பனை கன்வின்ஸ் செய்து அதன் பிறகே மீண்டும் அந்த காட்சியைப் படமாக்கினார்களாம்.

இதையும் படிங்க: பாக்கியாவுக்கு அடுத்த கேண்ட்டீன் ஆர்டரா? இனி அந்த மகாசங்கமம் உருட்டுக்கு தானே இது!…

google news
Continue Reading

More in Cinema News

To Top