Cinema History
ஒழுங்கா பாட்டு போடு.. இல்லனா?!.. இசையமைப்பாளரை மிரட்டிய ரஜினி!.. அட அந்த படமா?!..
Rajinikanth: திரைப்படங்களை பொறுத்தவரை அதன் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது அப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும்தான். சந்தோஷமோ, துக்கமோ வசனங்களால் சொல்ல முடியாதவற்றை ஒரு பாடலாசிரியரின் வரிகள் மூலம் பாட்டில் சொல்ல முடியும். அதனால்தான் திரைப்படங்களில் பாடல்கள் முக்கிய இடத்தை பெறுகிறது.
60,70களில் பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் கண்ணதாசன், வாலி போன்ற கவிஞர்களின் பாடல் வரிகளில் எண்ணற்ற அற்புதமான பாடல்கள் உருவாகியது. எம்.ஜி.ஆர் தன்னை புரமோட் செய்தவற்கும், தன்னை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குமே பாடல்களைத்தான் பயன்படுத்தினார்.
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் பட்டத்தை ரஜினிக்கு தூக்கி கொடுத்த பிரபலம்!… இப்படி தான் இந்த விஷயம் நடந்துச்சாம்!
எம்.எஸ்.விக்கு பின் திரையுலகை தனது இசையால் கட்டி ஆண்டவர் இசைஞானி இளையராஜா. இவரின் இசையாலேயே பல படங்கள் வெற்றி பெற்றது. ஒரு உணர்ச்சிமிக்க காட்சியில் இயக்குனர் சொல்ல நினைத்ததை இளையராஜா தனது பின்னணி இசை மூலம் சொல்லி விடுவார். 80களில் பல திரைப்படங்களின் வெற்றிக்கே இளையராஜா தேவைப்பட்டார்.
ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம்தான் மனிதன். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க சொல்லி கேட்டனர். ஆனால், அவர் முடியாது என மறுத்துவிட்டார். என்ன செய்யலாம் என யோசித்தபோது ஒருமாதம் நேரம் எடுத்து யோசித்து, ஆலோசனை செய்து சந்திரபோஸை இசையமைக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தலைவன் வேற ரகம்! இன்னும் காஷ்மீரில் குளிர்காயும் அண்ணாச்சி.. மாத்தியோசி ஸ்டைலில் வைரலாகும் வீடியோ
ரஜினிக்கோ அவர் மீது நம்பிக்கை இல்லை. எனவே அவரை பார்க்கும்போதெல்லாம் ‘ஒழுங்கா பாட்டு போடு… இல்லன்னா அவ்வளவுதான்’ என செல்லமாக மிரட்டிக்கொண்டே இருந்தார். பெரிய நிறுவனம் மற்றும் பெரிய ஹீரோ படம் என்பதால் சந்திரபோஸுக்கும் ஹிட் பாடல்களை கொடுக்கும் நெருக்கடி இருந்தது.
அதனால், இழைத்து இழைத்து டியூன் போட்டார் சந்திரபோஸ். அப்படி அவர் போட்ட.. மனிதன் மனிதன் எவன்தான் மனிதன், வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்.. ஏதோ நடக்கிறது.. காளை காளை முரட்டுக்காளை.. ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. படமும் வெள்ளிவிழா கண்டது. இப்படத்தின் வெற்றிவிழாவில் பேசிய ரஜினி ‘போஸின் மீது எனக்கு நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது. எனவே, அவரை சந்திக்கும்போதெல்லாம் மிரட்டி வந்தேன். ஆனால், அவரோ அருமையான பாடல்களை கொடுத்திருக்கிறார்’ என அவரை பாராட்டி பேசினார்.
இதையும் படிங்க: டிவியில் எப்ப போட்டாலும் டி.ஆர்.பி.-யில் சம்பவம் செய்யும் 5 திரைப்படங்கள்!. மாஸ் காட்டும் விஸ்வாசம்!..