Connect with us
saravana

Cinema News

தலைவன் வேற ரகம்! இன்னும் காஷ்மீரில் குளிர்காயும் அண்ணாச்சி.. மாத்தியோசி ஸ்டைலில் வைரலாகும் வீடியோ

Legend Saravana: சென்னையில் பிரம்மாண்டமாக இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸின் முதலாளியான லெஜண்ட் சரவணா தற்போது இணையத்தில் பிரபலமாகி வருகிறார். தமிழ் நாட்டில் இருக்கும் தொழிலதிபர்களில் லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

சென்னையில் பல கிளைகளில் இவரின் கடைகள் அமைந்துள்ளது. நாள் தோறும் கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யும் இவரது கடைகளில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த ஊழியர்கள் பெரும்பாலும் தென்தமிழகத்தைச் சார்ந்தவர்கள்.

இதையும் படிங்க: டிவியில் எப்ப போட்டாலும் டி.ஆர்.பி.-யில் சம்பவம் செய்யும் 5 திரைப்படங்கள்!. மாஸ் காட்டும் விஸ்வாசம்!..

இவரது கிளைகளின் கீழ் நகைக்கடை, துணிக்கடை, பாத்திரக்கடை என அனைத்து உயர்தரமான பொருள்களும் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் தன் கடைக்கான விளம்பரத்தில் இவரே நடித்து கடையின் விளம்பரத்தை தேடிக் கொண்டார்.

அதன் விளைவுதான் சினிமாவில் நடிக்க முடிந்தது. இவரை வைத்து விளம்பரப் படங்களை எடுத்த ஜேடி- ஜெர்ரி ஆகியோர்தான் லெஜெண்ட் என்ற பெயரில் படத்தை எடுத்தார்கள். ஆனால் அந்தப் படம் சரியாக ஓடவில்லை. மாறாக பல ட்ரோல்களுக்கு ஆளாகியது.

இதையும் படிங்க: தொடக் கூடாத இடத்தில் தொட்டு.. ரெண்டு லட்சம் பேரம் பேசி! நடிகையின் வாழ்க்கையில் நடந்த அவலம்

இருந்தாலும் நம்ம அண்ணாச்சி தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கினார். யாராவது மாட்ட மாட்டார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்த அண்ணாச்சியிடம் மாட்டியது இயக்குனர் துரை. எதிர் நீச்சல் படத்தை எடுத்த துரை அடுத்ததாக அண்ணாச்சியை வைத்து படம் எடுக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில் காஷ்மீரில் அண்ணாச்சி இருக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் கலர் கலராக ஆடை அணிந்து போஸ் கொடுக்கும் விதமாக அந்த வீடியோ தயாராகியிருக்கிறது. கூடவே அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறோம் என்ற கேப்ஷனோடு அந்த வீடியோ வெளியாகியிருக்கின்றது.

இதையும் படிங்க: பத்திக்கிட்டு எறியும் கோலிவுட் நெப்போட்டிசம்!… தனுஷின் மகனும் களமிறங்குகிறாரா? ஷாக் தரும் பிரபலம்…

இதோ அந்த வீடியோ: https://x.com/yoursthelegend/status/1748247689782067554?s=20

google news
Continue Reading

More in Cinema News

To Top