Cinema History
வீட்டில் சண்டை போட்டு.. வித்-அவுட் ரயிலில் போய் நடிகனான எம்.ஆர்.ராதா!.. பிளாஷ்பேக் செமயா இருக்கே!..
mr radha: நடிகவேள் என திரையுலகாலும், நடிகர்களாலும் அழைக்கப்பட்டவர்தான் எம்.ஆர்.ராதா. சிறுவயது முதலே நாடகங்களில் நடித்தவர். சினிமாவில் வருவதற்கு முன்பே நாடக உலகின் சூப்பர்ஸ்டாராக இருந்தவர் இவர். எம்.ஆர்.ராதா நாடகம் போடுகிறார் என்றாலே கூட்டம் குவியும். புரட்சிகரமான மற்றும் பகுத்தறிவு கருத்துக்களை தனது நாடகங்களில் பேசியவர் இவர்.
அதனாலேயே ராதாவின் நாடகங்களுக்கு ஒரு குரூப் பெரிய எதிர்பார்பு தெரிவித்தனர். அவரது நாடகத்தை நடத்தவிடாமல் பல போராட்டங்களும் நடந்துள்ளது. ஆனால், எம்.ஆர்.ராதா எதற்கும் அஞ்சியது இல்லை. கொண்ட கொள்கையில் கடைசிவரை உறுதியாக இருந்தார். வெளியே ஒரு தலைப்பு போட்டுவிட்டு உள்ளே வேறு தலைப்பில் நாடகம் போடுவார்.
இதையும் படிங்க: ஒரு ரூபாய் கணக்கு பார்த்த தயாரிப்பாளர்.. எம்.ஆர்.ராதா மகன் செஞ்சதுதான் ஹலைட்!..
திரைப்படங்களில் இவர் காட்டிய வில்லத்தனத்தை இதுவரை யாரும் காட்டியது கிடையாது. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் பல திரைப்படங்களில் வில்லனாக கலக்கி இருக்கிறது. குறிப்பாக சகுனி புத்தியுடன் குடும்பத்தை பிரிக்கும் வேலையை எம்.ஆர்.ராதா போல சிறப்பாக செய்தவர் சினிமாவில் யாரும் இல்லை.
இவர் நாடகத்தில் நுழைந்ததற்கு ஒரு கதை இருக்கிறது. எம்.ஆர்.ராதா சிறுவனாக இருந்தபோது பள்ளிக்கு செல்வதில் பெரிய ஆர்வம் இல்லை. எனவே, ஊரை சுற்றி வந்திருக்கிறார். இவருக்கு ஜானகிராமன் என்கிற ஒரு அண்ணன் இருந்துள்ளார். ஒருமுறை சாப்பிடும்போது அவருக்கு 2 மீன் துண்டுகளையும், ராதாவுக்கு ஒரு மீன் துண்டையும் அவரின் அம்மா வைத்திருக்கிறார். இதுபற்றி ராதா கேட்டப்போது ‘அவன் ஸ்கூலுக்கு போறான்’ என அம்மா சொல்ல சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் எம்.ஆர்.ராதா.
இதையும் படிங்க: கருணாநிதிக்கு எம்.ஆர்.ராதா ‘கலைஞர்’ பட்டம் கொடுத்தது இப்படித்தான்!.. சுவாரஸ்ய தகவல்..
எக்மோர் ரயில் நிலையத்தில் அவர் சுற்றி திரிந்தபோது ரங்கசாமி நாயுடு என்பவர் பொட்டியை தூக்கி வர சொல்லி ராதாவுக்கு காலனா காசு கொடுத்திருக்கிறார். அப்போது ‘உனக்கு அப்பா அம்மா இருக்கிறார்களா?’ என கேட்க, ராதா ‘இல்லை’ என சொல்லிவிட்டார். உடனே ‘நாடக கம்பெனியில சேர்ந்துக்கிறியா?’ என அவர் கேட்க ராதாவோ ‘சரி’ என தலையாட்டி விட்டார்.
ராதாவை அழைத்துக்கொண்டு ரயிலில் ஏறிய ரங்கசாமி நாயுடு சீட்டிக்கு கீழே ராதாவை ஒளிந்து கொள்ள சொன்னார். ஒரு போர்வையை எடுத்து சீட்டின் மீது போட்டு மூடி எம்.ஆர்.ராதா வெளியே தெரியாமல் பார்த்துகொண்டார். இப்படத்தின் நாடக கம்பெனிக்கு போனார் எம்.ஆர்.ராதா. இதுபற்றி ஒருமுறை சொன்ன ராதா ‘நாடகத்தில் நடிப்பதற்கு முன் ரயிலில் வித்-அவுட்டில் எப்படி பயணிப்பது என கற்றுக்கொண்டேன்’ எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: நடிகவேள்.. நாடகத்தை சீக்கிரம் போடு!. கத்திய ரசிகர்கள்!.. கடுப்பாகி எம்.ஆர்.ராதா என்ன செய்தார் தெரியுமா?…