Connect with us

Bigg Boss

போங்கப்பா நான் போக மாட்டேன்!.. யூ டர்ன் எடுத்த சரவண விக்ரம்!.. தேவையா ப்ரோ இதெல்லாம்?

Saravana Vickram: பிக்பாஸ் தமிழ் சீசன்7ல் கலந்துக்கொண்டவர் சரவண விக்ரம். இவர் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து இருந்ததால் ஒரு அறிமுகத்துடனே தான் சென்றார். ஆனால் அங்கு நடந்ததுதான் செம ட்விஸ்ட்டாக அமைந்து ரசிகர்களிடம் கலாய் வாங்கினார்.

முதல் சில வாரங்கள் அவரிடம் இருந்து எந்த கன்டெண்ட்டும் கிடைக்கவே இல்லை. ஒரு கட்டத்தில் பிக்பாஸ் வீட்டு ப்ளாஸ்மா முன்னாடி நின்று தன்னை டைட்டில் வின்னராக அவர் சொன்ன வீடியோ வைரலாக அவரை அனைவரும் கலாய்க்க தொடங்கினார். அதுவே அவருக்கு நல்ல வோட் வங்கியை உருவாக்கியது.

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் பாக்கியலட்சுமியின் அடுத்த மகா சங்கமம் ஆரம்பம்!… எத்தன தடவை?

ஆனால் சத்தமே இல்லாமல் தலைவர் மாயா கேங்கில் இணைய மீண்டும் மிக்சரானார். அவர் குடும்பம் வந்து அவருக்கு அறிவுரை வழங்கிக்கூட திருந்தாமல் எலிமினேட் செய்யப்பட்டார். மீண்டு வந்து ஒரு மாஸ் காட்டுவார் என சிலர் நினைக்க இருந்த மொத்த இமேஜையும் இரண்டே நாளில் காலி செய்து கொண்டு வெளியேறினார்.

தற்போதும் மாயா கூட்டத்துடனே வலம் வர இவரை ரசிகர்களே பலவாறு கலாய்த்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் தன்னுடைய  இன்ஸ்டாவில் நான் என்னுடைய பேஷனை விட்டு விலகுவதாக போஸ்ட் போட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் ஆறுதல் சொல்லுவர் என்பது அவரின் எண்ணமாக இருந்து இருக்கலாம்.

இதையும் படிங்க: எம்ஜிஆர், சிவாஜி செய்யாத சாதனையை நான் செஞ்சிருக்கேன்.. கர்வத்துடன் கூறிய சிவக்குமார்

Continue Reading

More in Bigg Boss

To Top