singer Bavadharani: தமிழ் சினிமாவில் இசைஜாம்பவனாக மின்னும் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணியின் மறைவு இன்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த பவதாரணிக்கு ஸ்ரீலங்காவில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.
ஆனால் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்ற செய்திதான் அனைவரையும் திக்குமுக்காட வைத்தது. இந்த நிலையில் பவதாரணியின் உறவினரும் நடிகையுமான விசாலினி சமீபத்தில் பவதாரணி குறித்து சில விஷயங்களை இணையம் மூலமாக கூறிவருகிறார். விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘பாவம் கணேசன்’.
இதையும் படிங்க: இப்பதான் ராகவா லாரன்ஸ்!. 80களில் உறைய வைக்கும் பேய் படங்களில் கலக்கிய நிழல்கள் ரவி..
இந்த சீரியலில் கணெசனுக்கு அக்காவாக நடித்திருப்பவர்தான் இந்த விசாலினி. இவர் இளையராஜாவுக்கு நெருங்கிய உறவினராம். ஸ்ரீலங்கா போறதுக்கு முன்பே பவதாரணிக்கு சென்னையில்தான் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்ததாம். அப்பொழுதெல்லாம் இந்த புற்றுநோய் இருப்பது யாருக்கும் தெரியாதாம்.
இடையிலேயே பவதாரணி உடல் சுருங்கி மிகவும் மெலிதாக காணப்பட்டிருக்கிறார். ஏன் இப்படி ஆயிட்ட? என்று கேட்டால் டயட்டில் இருப்பதாகவும் சுகர் இருப்பதாகவும் கூறி சமாளித்தாராம். ஒரு கட்டத்திற்கு பிறகுதான் கார்த்திக் ராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து பேசி ஆலோசித்த பிறகே ஸ்ரீலங்கா கொண்டு போயிருப்பதாக விசாலினி கூறினார்.
இதையும் படிங்க: இருக்க இடத்தை விட்ர கூடாது!… முடிவில் இருந்து பின்வாங்கிய விஜய்.. இதுதான் புது திட்டமாம்!…
ஆனால் பவதாரணியின் உடல்நிலையில் முழு கவனம் செலுத்தியவர் அவரது அம்மாதானாம்.அவரது அம்மா இருக்கிற வரைக்கும் நன்றாகத்தான் இருந்தாராம். அம்மா இறந்த பிறகு பவதாரணி அவரது உடல் பற்றி அக்கறையின்றி இருந்தாராம். சில விஷயங்களை மறைக்கவும் செய்தாராம். யாரிடமும் வெளிப்படையாக பேசமாட்டாராம். அவரது சகோதரர்கள் மிகவும் வற்புறுத்தி கேட்டால்தான் எதையுமே சொல்லுவாராம்.




