தேசிங்கு ராஜா 2 படத்தில் நடிக்கும் புகழ்… ஆனா அவர் கெட்டப்பை கேட்டா அசந்துடுவீங்க

Published on: January 30, 2024
---Advertisement---

Desingh Raja2: விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவில் சின்ன சின்ன வேடம் போட்டு வந்தவர் புகழ். அவர் தற்போது தனக்கு வாழ்க்கை கொடுத்த ஒரு முக்கிய வேடத்தினை தன்னுடைய அடுத்த படத்தில் போட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகர் புகழ். ஆனால் அவருக்கு அந்த நிகழ்ச்சி முதலில் பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. வடிவேலு பாலாஜி டீமில் இணைந்தவர் பெண் வேடம் போட்டு நடித்தார். ஆனால் அந்த கதாபாத்திரம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

இதையும் படிங்க: கேப்டன் நினைவிடத்தில் கூல் சுரேஷ்! சந்தானத்திற்காக ஓடோடி வந்து மாஸ் காட்டிய சம்பவம்

அதே நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய கோமாளியாக எண்ட்ரி கொடுத்தார். முதல் சில வாரத்திலேயே அவருக்கான ரசிகர் கூட்டம் எக்கசக்கமாக உயர்ந்தது. இரண்டு சீசன்களில் ஹிட் கொடுத்த புகழுக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்தது. 

ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தொடர்ந்து, அவருக்கு பெரிய திரைப்பட வாய்ப்புகளும் வந்து கொண்டு இருக்கும் நிலையில் புகழ் தன்னுடைய கேரியரில் முக்கிய விஷயத்தினை கையில் எடுத்து இருக்கிறார். தேசிங்கு ராஜா இரண்டாம் பாகத்தில் புகழும் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறாராம்.

ஆனால், அந்த படம் முழுவதும் தனக்கு ரீச் கொடுத்த பெண் வேடத்தில் நடித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. சின்ன காட்சி மட்டும் இல்லையாம். கிட்டத்தட்ட படம் முழுவதுமே பெண் வேடத்தில் மட்டுமே புகழ் நடித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: படம் சுமாருனாலும் ஹவுஸ்ஃபுல்! அதற்கு காரணம் இதுதான்.. சிங்கப்பூர் சலூன் குறித்து பிரபலம் சொன்ன தகவல்

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.