கேப்டன் நினைவிடத்தில் கூல் சுரேஷ்! சந்தானத்திற்காக ஓடோடி வந்து மாஸ் காட்டிய சம்பவம்
Actor Cool Suresh: பிக்பாஸ் போயிட்டு வந்ததில் இருந்தே கூல் சுரேஷ் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். படங்களில் நடிக்கவும் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பிக்பாஸ் வீட்டிலிருந்து வந்ததும் முதல் வேலையாக சந்தானத்தை போய் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினார் கூல் சுரேஷ்.
அந்தளவுக்கு இருவரும் நெருங்கமான நண்பர்கள். ஒரு பக்கம் சிம்பு இன்னொரு பக்கம் சந்தானம் என தன் நண்பர்களுக்காக என்னென்ன செய்யவேண்டுமோ செய்து கொண்டு வருகிறார். ஏற்கனவே சிம்புவின் படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் முதல் ஷோவை பார்த்துவிட்டு வந்து கூல் சுரேஷ் சிம்புவின் படத்தை விளம்பரம் செய்வார்.
இதையும் படிங்க: சொன்ன வார்த்தையை காப்பாத்திட்டாரே… கேப்டன் மகன் படத்துக்கு கால்ஷூட் கொடுத்த முக்கிய நடிகர்
அதுதான் அவருக்குண்டான மாஸை இன்னும் அதிகரித்தது. எந்த தியேட்டர் பக்கம் சென்றாலும் அங்கு கூல் சுரேஷ் காணலாம். அதன் பிறகே தனக்கென்று ஒரு பாதை வேண்டும் என்பதற்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அவர் நினைத்த எண்ணம் நிறைவேறியது என்று சொல்லலாம்.
இன்று கூல் சுரேஷ் மீது ரசிகர்கள் இந்தளவு அன்போடு இருக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் பிக்பாஸ்தான். இந்த நிலையில் இன்று கேப்டன் நினைவிடத்திற்கு சென்ற கூல் சுரேஷ் கூடவே விஜயகாந்த் புகைப்படத்தையும் சந்தானத்தின் புதிய படமான வடக்குப்பட்டி ராமசாமி பட போஸ்டரை எடுத்து சென்றார்.
இதையும் படிங்க : என்ன டிரெஸ் இது!. அவங்கள உள்ள போக சொல்லுங்க!. நயனின் உடையை பார்த்து பதறிய இயக்குனர்…
அதை விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். வடக்குப்பட்டி ராமசாமி படம் வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அந்தப் படத்தில் கூல் சுரேஷும் நடிக்கிறாராம். சந்தானத்தின் ஒவ்வொரு படமும் ரிலீஸாகும் போது ஏதாவது ஒரு கோயிலில் வழிபாடும் செய்தும் ஒரு சில பேருக்கு அன்னதானம் வழங்குவதும் கூல் சுரேஷின் வழக்கமாம். அதனால் இந்தப் படத்திற்காக சாமியாக மதிக்கும் விஜயகாந்தை தேடி வந்திருக்கிறேன் என கூல் சுரேஷ் கூறினார்.