என்ன டிரெஸ் இது!. அவங்கள உள்ள போக சொல்லுங்க!. நயனின் உடையை பார்த்து பதறிய இயக்குனர்...

by Rohini |   ( Updated:2024-01-30 10:42:26  )
nayan
X

nayan

Actress Nayanthara: தமிழ் சினிமாவில் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா திகழ்கிறார். அதுவும் ஒரு தயாரிப்பாளராகவும் தொழிலதிபராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஒரு பக்கம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா இரு குழந்தைகளுக்கு அம்மாவா இருந்து வருகிறார். அதனால் குடும்பம், தொழில் என மிகவும் பிஸியான நடிகையாக மாறியிருக்கிறார். சமீபகாலமாக பெண்களை மையப்படுத்தி அமையும் கதைகளில் நடித்து வரும் நயன்,

இதையும் படிங்க: அதான மாமா கேரக்டரை ஈசியாக எஸ்கேப் செய்ய வச்ச ரோகினி!… அட போங்கப்பா..ஜவ்வா இழுக்குறீங்களே?

பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நடிகையாக மாறியிருக்கிறார். அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக அறம் படத்தை கூறலாம். அந்தப் படத்தில் கலெக்டராக வந்து பிரச்சினையை அவர் கையாளும் விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அந்தளவுக்கு அற்புதமாக நடித்திருந்தார் நயன்.

இந்த நிலையில் அவர் முதல் படமான ஐயா படத்தை பற்றி சமீபத்தில் சரத்குமார் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நயனின் முதல் ஹீரோ சரத்குமார்தான். ஹரி இயக்கத்தில் வெளிவந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் படிங்க: நான் பூச்சாண்டி காட்றேன்னு நினைக்குறாங்க!.. ஒருநாள் பாருங்க!.. அப்பவே சொன்ன விஜய்…

அந்தப் படத்தில் நயன் ஒரு கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் தாவணி பாவாடையுடன் நடித்திருப்பார். சிவந்திபுரம் என்ற கிராமத்தில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாம். அங்குதான் முதன் முதலில் நயன் வந்து இறங்கினாராம். ஆனால் வரும் போது முழு மாடர்ன் டிரெஸில் வந்து இறங்கியிருக்கிறார்.

அதை பார்த்ததும் ஹரி பதைபதைத்து விட்டாராம். உடனே அருகில் இருந்தவரை ‘யோவ் அந்த பொண்ண அப்படியே உள்ளே போகச் சொல்லுயா’ என கூறினாராம். ஏனெனில் ஹரியின் மனதில் தன் பட ஹீரோயின் ஒரு கிராமத்து பெண்ணாகவே நினைத்துவிட்டார். அதனாலேயே அந்த பெண்ணை மாடர்ன் டிரெஸில் பார்க்க அவர் மனது ஏற்றுக் கொள்ளவில்லையாம்.

ஆனால் இதற்கிடையில் சரத் ‘சார் இருக்கட்டும். வரச் சொல்லுங்க. ஹீரோயினையாவது பார்த்துக்கிறேன் ’ என்று கூறினாராம்.

இதையும் படிங்க: லோகேஷ் பற்றி எஸ்.ஏ.சி சொன்னது உண்மையா?!.. இதுதான் நடந்திருக்கும்!.. பிரபலம் பேட்டி!…

Next Story