Cinema History
டி.எம்.எஸ் பாடியதை தூக்கிவிட்டு எஸ்.பி.பி-ஐ பாட வைத்த இளையராஜா!.. சிவாஜி படத்தில் நடந்த சம்பவம்..
Ilayaraja: 50,60களில் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களுக்கு பாடல்களை பாடியவர் டி.எம்.சவுந்தரராஜன். தனது கணீர் குரலால் ரசிகர்களை மயக்கியவர் இவர். எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும், சிவாஜிக்கு ஒரு மாதிரியும் என குரலை அழகாக மாற்றி பாடும் வல்லமை கொண்டவர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். அதேநேரம், 70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் இளையராஜா நுழைந்தபின் அவர் பல புதிய பாடகர்களை அதிகம் பாட வைத்தார். ஏற்கனவே எஸ்.பி.பி பாடிக்கொண்டிருந்தாலும் இளையாஜா வந்த பின் அவரின் படங்களில் அதிகம் பாடியவர் அவர்தான். அதேபோல். எஸ்.ஜானகி, சித்ரா, கே.ஜே.யேசுதாஸ், மனோ, மலேசியா வாசுதேவன் என பலரையும் பாட வைத்தார். இதனால், டி.எம்.எஸ் பாடுவது குறைந்து போனது.
இதையும் படிங்க: இரண்டு நடிகர்கள் நடித்து தூக்கப்பட்டு 3வதாக சிவாஜி நடித்த படம்!.. தமிழ் சினிமாவின் பெஸ்ட் இதுதான்..
இந்நிலையில், இளையராஜா இசையமைத்த ஒரு படத்தில் டி.எம்.எஸ் பாடி பின் அது தூக்கப்பட்டு எஸ்.பி.பி பாடிய சம்பவம் பற்றித்தான் இங்கே பாரக்க்போகிறோம். சிவாஜி, கே.ஆர்.விஜயா, ரஜினி ஆகியோர் நடித்து 1979ம் வருடம் வெளியான திரைப்படம்தான் நான் வாழவைப்பேன்.
இந்த படத்தில் ‘என்னோடு பாடுங்கள்’ என ஒரு பாடல் காட்சி வரும். தனக்கு இருக்கும் நோயால் காதலியை கைபிடிக்க முடியுமா என சிவாஜி யோசித்துக்கொண்டிருக்கும்போது அவரின் காதலிக்கு பிறந்தநாள் வரும். அதில் அவர் பாட வேண்டும். மெட்டும், இசையும் துள்ளலாக இருக்க வேண்டும். ஆனால், பாடும் குரலில் ஒரு சோகம் இருக்க வேண்டும். இந்த சூழ்நிலைக்கு அழகாக மெட்டு போட்டார் இளையராஜா.
இதையும் படிங்க: எனது இரண்டு கைகளையும் இழந்துவிட்டேன்.. கதறி அழுத சிவாஜி கணேசன்… என்ன நடந்தது தெரியுமா?
முதலில் இந்த பாடலை பாடியது டி.எம்.எஸ்.தான். ஆனால், அவரின் குரலில் பல இடங்களில் தழுதழுப்பும், நடுக்கமும் இருக்கும். அதற்கு காரணம் அவரின் வயது. எனவே, அதில் திருப்தி இல்லாமல் அதே பாடலை எஸ்.பி.பி-ஐ வைத்து பாட வைத்தார் இளையராஜா.
அந்த பாடலை கேட்டால் எஸ்.பி.பியின் குரலில் இருக்கும் இளமையும், சோகமும் அந்த சூழ்நிலைக்கு பொருத்தமாக அமைந்திருக்கும்.
இதனால், டிம்.எம்.எஸ்-ஐ இளையராஜா திட்டமிட்டே தூக்கிவிட்டார் என பலரும் பேச துவங்கினார்கள். ஆனால், அதே படத்தில் இடம்பெற்ற ’எந்தன் பொன் வண்ணமே’ பாடலை டிம்.எம்.எஸ் பாடியிருப்பார். இளையராஜா நினைத்திருந்தால் அந்த பாடலை மலேசியா வாசுதேவனை வைத்து ஒலிப்பதிவு செய்திருக்க முடியும். ஏனெனில் அப்போது சிவாஜிக்கு அவர்தான் நிறைய பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். எனவே, முதலில் நமக்கு ஒன்று திருப்தியாக இருந்தால்தான் ரசிகர்களுக்கு அது பிடிக்கும் என்பதில் இளையராஜா உறுதியாக இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: அந்த வேடத்தில் எப்படி நடிப்பது?!.. பயத்தில் சிவாஜிக்கு வந்த காய்ச்சல்!.. 100 படம் நடித்தும் இப்படியா!..