இளையராஜா தமிழ்த்திரை உலகில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தது அன்னக்கிளி படத்தில் தான். இது நமக்குத் தெரியும். அந்தப் படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. ஆனால் இளையராஜாவின் முதல் பாடல் அதற்கு முன்பே வந்துவிட்டதாம். வெளியே தெரியாமல் இருந்த இந்த விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதைப் பற்றி கவிஞர் முத்துலிங்கம் சொன்ன தகவல்கள் தான் இவை.

தமிழ்த்திரை உலகில் தனக்கென்று தனி சாம்ராஜ்யத்தைக் கொண்டு வந்தவர் இசைஞானி இளையராஜா. இவர் ஆரம்ப காலகட்டத்தில் தனக்கான இடத்தைப் பிடிப்பதற்காகக் கடுமையாகப் போராடினார்.
கவிஞர் முத்துலிங்கம் தான் இளையராஜா இசை அமைத்த முதல் பாடலையே எழுதியவராம். இளையராஜாவும் இவரைப் பற்றி சொல்வதே இல்லையாம். பொண்ணுக்குத் தங்க மனசு என்ற படத்தில் தஞ்சாவூரு சீமையிலே தாவி வந்த பொன்னியம்மான்னு ஆரம்பமாகும் அந்தப் பாடல். அது உதவியாளர் போட்ட டியூன். ஆனா அவரோட பேரு படத்துல வராது. பாடலை கவிஞர் முத்துலிங்கம் எழுதினாராம்.

அந்தப் பாடலுக்கு டியூன் போட்டவர் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளர் இளையராஜா தானாம். அந்த வகையில் பார்த்தால் இதுதான் இளையராஜாவின் முதல் பாடல். இளையராஜாவின் இசையில் முதன் முதலாகப் பாட்டு எழுதிய பெருமையும் எனக்குத் தான் உண்டு என்கிறார் முத்துலிங்கம்.
ஆனால் இன்னொரு வேதனையான விஷயத்தையும் சொல்கிறார். ஆனால் இந்த விஷயத்தை அவர் தான் பல இடங்களிலும் சொல்லி வருகிறாராம். இளையராஜா ஒரு இடத்திலும் சொல்லவே இல்லையாம். அவர் இசையில் 100 பாடல்களுக்கும் மேல் எழுதிவிட்டாராம் கவிஞர் முத்துலிங்கம்.
எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவஞ்சலி கூட்டம் முதன் முதலா நடந்தது. அப்போது இளையராஜாவும் அங்கு வந்து இருந்தார். அவரை வைத்துக்கொண்டே நான் இந்த விஷயத்தை அப்போதும் சொன்னேன். ஆனால் அப்போதும் இளையராஜா சிரித்துக் கொண்டே தான் இருந்தாராம்.
மேற்கண்ட தகவல்களை பிரபல சினிமா விமர்சகரும், யூடியூபருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.





