Cinema News
கடைசியாக அரசியல் படம்.. தளபதி69 படத்தினை இயக்க போவது இந்த ஹிட் இயக்குனரா?
Thalapathy69: விஜயின் சினிமா கேரியரில் கடைசி படமாக இருக்கும் எனச் சொல்லப்படும் 69வது படத்தின் இயக்குனர் குறித்த ஒரு ஸ்பெஷல் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. உண்மையிலேயே இது மிகப்பெரிய ட்விஸ்ட் தான் என்கின்றனர் ரசிகர்கள்.
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக வந்த விஜய் முதலில் விமர்சிக்கப்பட்டார். பின்னர் வெகுவாக போராடி இன்று கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தை பிடித்து இருக்கிறார். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாகும் இருக்கும் நிலையில் அரசியலில் எண்ட்ரி என்ற முடிவே பலரிடம் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அரசியலில் குதித்த விஜய்க்கு அஜீத்தின் ஆதரவு இருக்குமா? சவால்களில் சாதிப்பாரா?
நேற்றி பரபரப்பாக தன்னுடைய கட்சியை தமிழக வெற்றி கழகம் என அறிவித்தார். வரும் 2026 தேர்தல் தான் நம் இலக்கு எனவும் அவர் அறிவித்து இருந்தார். கூடவே அறிக்கையில் நான் ஒப்புக்கொண்ட இன்னொரு படத்தினை முடித்து விட்டு மொத்தமாக அரசியலில் ஈடுபடுவேன் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இதனை இரண்டு விதமாக எடுத்துக்கொள்ள முடியும். மொத்தமாக சினிமாவில் இருந்து விலகுவதாகவோ இல்லை 2026 வரை இடைவேளை என்று கூட எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் வெங்கட் பிரபுவின் கோட் திரைப்படம் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
விரைவில் இந்த படம் முடிந்து விடும் நிலையில் அடுத்த படத்தினை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. முதலில் இந்த போட்டியில் இருந்தவர் கார்த்திக் சுப்புராஜ். தற்போது ஹெச்.வினோத் அரசியல் சார்ந்த ஒரு கதையை விஜயிடம் சொல்லி இருக்கிறாராம்.
இதையும் படிங்க: சக்சஸ வேற கொண்டாடிட்டோம்! என்ன பண்றது இப்போ? புது சர்ச்சையில் சிக்கிய ‘சிங்கப்பூர் சலூன்’