செக்க கொடுத்து நான் பட்ட பாடு! சிவகார்த்திகேயனிடம் மாட்டிக்கிட்டு முழிச்ச பிரபல இயக்குனர்

Published on: February 4, 2024
siva
---Advertisement---

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அஜித், விஜய் இவர்களுக்கு அடுத்த படியான இடத்தில் இருப்பவர் இவர்தான். விஜய் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டார். அஜித் சினிமாவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதவர் போல் இருக்கிறார். அதனால் அடுத்து சிவகார்த்திகேயன்தான் கோலிவுட்டின் கிங் என்றெல்லாம் ரசிகர்கள் மீம்ஸ்களை போட்டு தள்ளுகின்றனர்.

அந்தளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடிகராக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆரம்பகால படங்களை எடுத்துக் கொண்டால் காமெடி சார்ந்த படங்களையே எடுத்து நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது ஒரு முழு ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: முதல்ல வீட்ட பாரு… அப்புறம் நாட்டை பார்ப்போம்!.. விஜயை விளாசிய பயில்வான் ரங்கநாதன்…

இந்த நிலையில் மனம் கொத்தி பறவை படத்தின் இயக்குனர் எழில் சிவகார்த்திகேயனை பற்றி கூறும் போது இயக்குனர் லிங்குசாமி வீட்டில் ஏதோ ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்களாம். அந்த விழாவில் மிமிக்ரி செய்வதற்காக வந்தாராம் சிவகார்த்திகேயன்.

அந்த நேரத்தில்தான் எழில் சிவகார்த்திகேயனை பார்த்து இந்தப் படத்திற்கு சரியாக இருப்பார் என்று நினைத்து நடிக்க வைத்தாராம். ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் சேர வாய்ப்பே வரவில்லை என்று கூறி ஒரு சம்பவத்தையும் கூறினார்.

மனம் கொத்தி பறவை படத்திற்கு பிறகு வேறொரு படத்திற்காக எழில் சிவகார்த்திகேயனுக்கு 5 லட்சம் மதிப்புள்ள செக் ஒன்றை அட்வான்ஸாக கொடுத்திருந்தாராம். ஆனால் அந்த செக்கை சிவகார்த்திகேயன் பேங்கில் போடவே இல்லையாம்.

இதையும் படிங்க: எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி பற்றி இப்படி எல்லாமா பேசினாரு சந்திரபாபு? அதான் அவருக்கு பேட் லக்காச்சா?

அந்த சமயம் நிறைய வாய்ப்புகள் சிவகார்த்திகேயனை தேடி வர இயக்குனர்களும் அட்வான்ஸை கொடுத்து புக் செய்து விட்டார்களாம். அதில் சிவகார்த்திகேயன் பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்டாராம். போலீஸ் வரைக்கும் போனதாம். அதனால் சிவகார்த்திகேயனை நெருங்க முடியவில்லையாம். மேலும் எழில் கொடுத்த செக்கை எங்கே பேங்கில் போட்டு பணத்தை எடுத்துவிடுவாரோ என்றெல்லாம் எழில் பயந்தாராம்.

ஆனால் அப்படி எதுவும் சிவகார்த்திகேயன் செய்யவில்லையாம். அதன் பிறகு எழிலும் ஜெயம் ரவி, உதய நிதி, விஷ்ணு விஷால் இவர்களுடன் பிஸியாக இருந்ததனால் சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் படம் எடுக்க முடியவில்லை என்று கூறினார்.

இதையும் படிங்க: என் பையனோட வேல்யூ கமலுக்கு இப்போ தெரிஞ்சிருக்கு! அதான் கூப்பிட்டாரு.. வாயை கொடுத்து மாட்டிக்கினாரோ டிஆரு

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.